Aran Sei

ஆம்பூர்: மாட்டுக்கறி பிரியாணிக்கு தடை – மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டு தமிழ்நாடு SC/ST ஆணையம் நோட்டீஸ்

ம்பூரில் நடைபெறவிருக்கும் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணிக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதற்கு விளக்கம் கேட்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு SC/ST ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மே 13, 14, 15 தேதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆம்பூர் வர்த்தக மையத்தில் பிரியாணி திருவிழா நடத்தப்படுகிறது. இதில், மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்பூரில் சுமார் 100 பிரியாணி ஹோட்டல்கள் உள்ளன. இதில் சரிபாதிக்கும் அதிகமாக உணவகங்களில் மாட்டுக்கறி பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது.

மாட்டுக்கறி பிரியாணி தடைகுறித்து தலித் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர் குஷ்வாவை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி புறக்கணிப்பு – தமுஎகச கண்டனம்

”ஆம்பூரில் மாட்டுக்கறி பிரியாணியை சாப்பிடுபவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இதனால் பிரியாணித் திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணியை அனுமதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

இதற்குப் பதிலளித்த மாவட்ட ஆட்சியர் ஒரு சமுதாய மக்கள் மாட்டுக்கறி பிரியாணியை விரும்பவில்லை. அவர்களையும் கருத்தில் கொண்டு மாட்டுக்கறி பிரியாணியை அனுமதிக்கவில்லை” என்று தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விசிக உள்ளிட்ட அமைப்புகள் இலவசமாக மாட்டுக்கறி விருந்து அளிக்கப்போவதாக அறிவித்தன.

இந்நிலையில், மாட்டுக்கறி பிரியாணிக்கு தடை விதித்தது பட்டியல் இன, இஸ்லாமிய மக்களுக்கு எதிரான பாகுபாடு. தீண்டாமை மற்றும் பாகுபாடு காட்டப்பட்டதா? என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்படும். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு SC/ST ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இனியும் நீ உயிரோட இருக்கணுமா? Kalanjiyam Interview | Srilankan Crisis

ஆம்பூர்: மாட்டுக்கறி பிரியாணிக்கு தடை – மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டு தமிழ்நாடு SC/ST ஆணையம் நோட்டீஸ்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்