கோமோடா டிராகன்ஸ், சிறுத்தைகள் மற்றும் பறவைகளைக் கொண்டு உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவைத் தொழிலதிபர் முகேஷ் அம்பானி குஜராத்தில் உருவாக்கி வருவதாக ப்ளூம்பெர்க் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்திருக்கும் குஜராத் மாநிலத்தில், உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா முகேஷ் அம்பானி அமைத்துவருவதாகவும், மாநில அரசுக்கு உதவும் வகையில் பாதுகாப்பு மையத்துடன் அமைக்கப்பட இருக்கும் உயிரியல் பூங்காவை 2023 ஆம் ஆண்டில் திறக்கத் திட்டமிடப்பட்டருப்பதாகவும், ரிலையன்ஸ் குழுமத்தின் கார்பரேட் விவகார இயக்குநர் பரிமாள் நத்வானி தெரிவித்திருப்பதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘பேச்சுரிமையும் போராடும் உரிமையும் அடிப்படை மனித உரிமை’ – திஷா ரவிக்கு ஆதரவளித்த கிரேட்டா துன்பெர்க்
திட்டத்தின் மதிப்பு அல்லது மற்ற விவரங்கள்குறித்து அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார் என அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பேசிய கேம்ப்டன் வெல்த் நிறுவனத்தின் ஆராய்ச்சி இயக்குனர் ரெபெக்கா கோச், ”கனவுகளை நினவாக்கும் பொருளாதார சக்தி அம்பானி போன்ற பெரு முதலாளிகளிடம் இருக்கிறது” எனத் தெரிவித்ததாக ப்ளூம்பெர்க் கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.