அமேசான் நிறுவனம் 18,000க்கும் மேற்பட்ட பணியாளர்களை வேலை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் மற்றும் வணிக மென்பொருள் தயாரிப்பாளரான சேல்ஸ்போர்ஸ் ஆகியவை சமீபத்திய பெரிய வேலை இழப்புகளை அறிவித்து உள்ளன.
சுமார் 18,000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்யப்போவதாக அமேசான் நேற்று (ஜனவரி 4) தெரிவித்துள்ளது. சியாட்டலை தளமாகக் கொண்ட இந்நிறுவனத்தின் வரலாற்றில் இது மிகப்பெரிய பணிநீக்கம் ஆகும். இதில் அமேசான் பிரஷ் (Amazon Fresh) மற்றும் அமேசான் கோ (Amazon Go) ஆகியவை அடங்கும். இந்நிறுவனத்தில் மொத்தமாக 15 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அமெரிக்கா நியூ ஜெர்சி: தொழிற்சங்கத் தேர்தலுக்கு மனுத் தாக்கல் செய்யவிருக்கும் அமேசான் தொழிலாளர்கள்
இது குறித்து பேசிய தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி, “கடந்த காலங்களில் அமேசான் நிச்சயமற்ற மற்றும் கடினமான பொருளாதாரங்களை எதிர்கொண்டது “இந்த மாற்றங்கள் வலுவான செலவுக் கட்டமைப்புடன் எங்களது நீண்ட கால வாய்ப்புகளைத் தொடர உதவும் என கூறினார்.
அமேசான் வேலை இழப்பு கட்டணம், இடைநிலை சுகாதார காப்பீட்டு நன்மைகள் மற்றும் வேலை வாய்ப்பு ஆதரவு ஆகியவற்றையும் வழங்குகிறது.
சேல்ஸ்போர்ஸ், சுமார் 8,000 ஊழியர்களை அல்லது அதன் பணியாளர்களில் 10 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்வதாகக் கூறி உள்ளது.சேல்ஸ்போர்ஸின் உயர்மட்டத் தரவரிசையில் ஏற்பட்ட ஒரு அதிர்வு காரணமாக பணிநீக்கங்கள் செய்யப்படுகின்றன.இந்நிறுவனத்தின் 23 ஆண்டுக்கால வரலாற்றில் மிகப் பெரிய பணி நீக்கமாகும்.
தொழிலாளர் உரிமைகளுக்காக போராடிய ஊழியர்கள்- பணிநீக்கம் செய்த அமேசான் நிறுவனம்
வேலையை இழக்கும் சேல்ஸ்போர்ஸ் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட ஐந்து மாத ஊதியம், உடல்நலக் காப்பீடு, தொழில் வளங்கள் மற்றும் பிற நன்மைகளைப் பெறுவார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
Source : BBC
ஆட்டுக்குட்டியின் குரங்கு காமெடி | வைச்சி செஞ்ச பத்திரிகையாளர்கள் | Aransei Roast | Annamalai | BJP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.