Aran Sei

டோலோ 650 மாத்திரையை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடி இலவசம் வழங்கப்பட்ட குற்றச்சாட்டு- டோலோ மருந்து நிறுவனம் மறுப்பு

காய்ச்சலின் தீவிரத்தை குறைக்க பயன்படுத்தப்படும் டோலோ 650 மாத்திரையை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு ரூ.1,000 கோடி அளவுக்கு இலவசங்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுவது மிக மோசமான விஷயம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் மற்றும் 9 மாநிலங்களில் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 36 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த மாதம் 6-ம் தேதி திடீர் சோதனை நடத்தினர்.

தடுப்பூசியை தனியாருக்கு விற்க அனுமதியளித்த மத்திய அரசு – இருமடங்காக விலை உயர்த்திய மருந்து நிறுவனம்

இந்த நிறுவனத்தின் தயாரிப்பான டோலோ-650 மாத்திரை காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த மாத்திரையை நோயாளிகளுக்கு பரிந்துரைக்க, மருத்துவர்களுக்கு சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு இலவசங்களை இந்த நிறுவனம் வழங்கியுள்ளதாக நேரடி வரிகள் மத்திய வாரியம் கடந்த 13-ம் தேதி குற்றம் சாட்டியிருந்தது.

இதனடிப்படையில், இந்திய மருந்துகள் மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

‘தடுப்பு மருந்து குறித்து பிரதமர் கூறிய உண்மைக்குப் புறம்பான தகவல்’ – தி இந்து ஆய்வில் அம்பலம்

அப்பொழுது மனுதாரர் சார்பில் ஆஜரான சஞ்சய் பரீக், “500 மில்லி கிராம் வரையிலான மாத்திரைகளின் சந்தை விலையை ஒழுங்குபடுத்த, ஒன்றிய அரசின் விலை கட்டுப்பாட்டு முறை அமலில் உள்ளது. ஆனால் 500 மில்லி கிராமுக்கு மேற்பட்ட மாத்திரைகளின் விலையை அந்தந்த மருந்து நிறுவனங்களே நிர்ணயிக்கலாம் என்ற முறை உள்ளது. அதிக லாபத்தை உறுதி செய்ய டோலோ மாத்திரைகள் தயாரிக்கும் நிறுவனம் 650 மி.கி. மாத்திரையை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு இலவசங்களை வழங்கி உள்ளது தெரிய வருகிறது. இதற்கு ஒன்றிய அரசு பதில் அளித்ததும், மேலும் பல உண்மைகளை இந்த நீதிமன்றத்துக்கு தெரிவிக்க விரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது கூட, நான் இந்த மாத்திரையை தான் சாப்பிட்டேன். மாத்திரையை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு இலவசங்களை கொடுத்ததாகக் கூறப்படுவது மிகவும் மோசமான விஷயம். இது குறித்து நாங்கள் விசாரிக்கிறோம்” என்று நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

பதஞ்சலி மருந்து குறித்து ஹர்ஷவர்தன் விளக்கமளிக்க வேண்டும் – இந்திய மருத்துவர்கள் சங்கம்

மனுதாரர் கூறியுள்ள புகாருக்கு ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.எம். நடராஜ் 10 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும் அதன்பின் மனுதாரர் தனது மறுப்பு அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அடுத்த மாதம் 29-ம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“டோலோ 650 மாத்திரைக்காக நாங்கள் நிச்சயமாக ரூ 1,000 கோடி செலவழிக்கவில்லை. ஏனெனில் கடந்த ஆண்டில் சுமார் 350 கோடி ரூபாய்க்கு டோலோ 650 மாத்திரை விற்பனையானது. 350 கோடி ரூபாய்க்கு விற்பனையான மாத்திரைக்கு யாரும் 1000 கோடி ரூபாய் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை என்று டோலோ மருந்து நிறுவனமான மைக்ரோ லேப்ஸ் லிமிடெட்டின் தகவல் தொடர்பு துணைத் தலைவர் ஜெயராஜ் கோவிந்தராஜு தெரிவித்துள்ளார்.

ஆகவே எங்கள் நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என்று அவர் கூறியுள்ளார்.

Source : india today

Kallakurichi Sakthi School Teacher Krithika threatened by Santhi | Advocate Dhamayandhi

டோலோ 650 மாத்திரையை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடி இலவசம் வழங்கப்பட்ட குற்றச்சாட்டு- டோலோ மருந்து நிறுவனம் மறுப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்