ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டத்தை எதிர்ந்து போராடிய விவசாயிகள் 2021 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று டெல்லியில் நடத்திய டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயி நவ்ரீத் சிங்கின் குடும்பத்தினர் தெரிவித்த கருத்தை ட்விட்டரில் பதிவிட்டதற்காக தி வயர் இணையதளத்தின் நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், செய்தியாளர் இஸ்மத் அராவின் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வாக்குமூலத்தை மட்டுமே சித்தார்த் வரதராஜன் மற்றும் இஸ்மத் அரா பதிவிட்டதாகவும் அதில் எவ்வித உள்நோக்கம் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, குடியரசு தினத்தன்று டெல்லியில் நடந்த டிராக்டர் அணிவகுப்பின் போது கொல்லப்பட்ட உயிரிழந்த விவசாயி நவ்ரீத் சிங்கின் குடும்பத்தினர் கூறிய கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டு இருந்ததாகச் சித்தார்த் வரதராஜன் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட்து. மேலும் கடந்த ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி அச்செய்தி தொடர்பாக கட்டுரை எழுதிய இஷ்மத் ஆரா, அதை பிரசுதிரித்த தி வயர் இணையதளம் மீதும் உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தின் சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தில் வழக்கு பதிந்தது.
இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிமன்ற நீதிபதிகள் அஸ்வனி குமார் மிஸ்ரா, ரஜ்னிஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, “குற்றஞ்சாட்டப்பட்ட சித்தார்த் வரதராஜன், செய்தியாளர் இஸ்மத் அரா வெளியிட்ட செய்தியை ஆய்வு செய்ததில், சம்பவம் நடந்ததை மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த தகவலைத்தான் தி வயர் இதழ் வெளியிட்டுள்ளது. சமூகத்தில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் அவர்களுக்கு இல்லை. எனவே, அவர்மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Source: TheWire
ஒவ்வொரு மசூதியா கை வைக்கிறாங்க | Paguthari
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.