திருமணமான பெண்கள் அல்லது திருமணமாகப் பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து பெண்களுக்கும், எந்த சூழ்நிலையிலும் மருத்துவ முறையில் பாதுகாப்பாகக் கருக்கலைப்பு செய்ய சட்டப்பூர்வ உண்டு என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மருத்துவ ரீதியாக கருக்கலைப்பு செய்யும் வழக்கை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது.
விருப்பமில்லாத கருவை பெண்கள் சுமந்தே ஆக வேண்டுமா? – கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றங்கள் தேவை
“ஒரு பெண் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தால் அதை மருத்துவ முறையில் செய்ய உரிமை உண்டு. கருக்கலைப்பு சட்டவிரோதமாகாது. இந்த உரிமையை மருத்துவக் கருவுறுதல் சட்டம் 1971(MTP) அனுமதிக்கிறது. திருமணமான பெண்கள் அல்லது திருமணமாகப் பெண்கள் என்ற பாகுபாடு இல்லை. அனைத்து பெண்களுக்கும், எந்த சூழ்நிலையிலும் கர்ப்பம் தரித்து 24 வாரங்கள் வரை மருத்துவ முறையில் பாதுகாப்பாகக் கருக்கலைப்பு செய்ய சட்டப்பூர்வ உண்டு என்று உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
மேலும், ‘சமயங்களில் திருமண உறவுகளில் வலுக்கட்டாயமாகப் பெண்கள் உடலுறவுக்கு ஆளாக்கப்பட்டு கர்ப்பம் தரிக்கிறார்கள். வலுக்கட்டாயமாகக் கருத்தரித்த பெண்களை அதிலிருந்து காப்பாற்ற இந்த சட்டம் அனுமதிக்கிறது. எனவே பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு பிழைத்து வரும் பெண்களைப் போலவே திருமணமாகி வலுக்கட்டாயமாகக் கர்ப்பம் தரிக்கப்பட்ட பெண்கள் மற்றும் திருமணமாகாத பெண்களுக்குக் கருக்கலைப்பு செய்ய சட்டப்பூர்வ உரிமை உண்டு’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RSS History – Nathan Exposes RSS Parade | Nathan | Vaathi Raid EP-1 | Modi | Annamalai | RSS Shaka
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.