Aran Sei

பட்ஜெட்டை மறுபரிசீலனை செய்ய நிதி அமைச்சருக்கு கடிதம் – அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

2022-23ஆம் ஆண்டுகளுக்கான பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கம் மற்றும் வர்த்தகர்களுக்கு எந்த சலுகையும் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ள அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பின் (சிஏஐடி) என்சிஆர் பிரிவு, நிவாரணம் வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய ஒன்றிய நிதி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதவுள்ளதாக தெரிவித்துள்ளது.

நேற்று(பிப்பிரவரி 1), 2022-23ஆம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்பித்துள்ளார்.

இது குறித்து, சிஏஐடியின் என்சிஆர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சுஷில் குமார் ஜெயின், “இந்த பட்ஜெட்டில் ஜவுளி, மின்னணு சாதனங்கள், நகைகள் போன்ற சில பொருட்களின் வரி விகிதத்தை குறைப்பதன் வழியாக ஒன்றிய அரசு நிவாரணம் அளித்துள்ளது. இது நிச்சயமாக அவற்றின் விற்பனையை அதிகரிக்கும்” என்று கூறியுள்ளார்.

பட்ஜெட்: சூழலியல் பேரிடரை உருவாக்கும் நதிநீர் இணைப்பு – ஜெய்ராம் ரமேஷ்

“சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்மீதான திட்டங்கள் மகிழ்ச்சியான நடவடிக்கையாக உள்ளன. ஆனால் வர்த்தகர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு எந்த நிவாரணமும் இல்லை. இந்த பட்ஜெட்டில் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பட்ஜெட்டை மறுபரிசீலனை செய்ய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நாங்கள் மீண்டும் ஒரு கடிதம் எழுதுவோம். முடியுமானால், வணிகர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு சில நிவாரணங்களை வழங்கலாம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜிஎஸ்டி மற்றும் வருமான வரியின் அம்சங்களை மறுபரிசீலனை செய்யுமாறு அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) பலமுறை ஒன்றிய அரசை வற்புறுத்தி வருகிறது.

“ஆனால், அக்கோரிக்கை ஒன்றிய அரசால் பொருட்படுத்தப்படவே இல்லை” என்று சுஷில் குமார் ஜெயின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Source: PTI

பட்ஜெட்டை மறுபரிசீலனை செய்ய நிதி அமைச்சருக்கு கடிதம் – அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்