உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பவே பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அகில இந்திய இஸ்லாமியர் தனிநபர் சட்ட வாரியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஏப்ரல் 23 அன்று, உத்தரகண்ட் மாநிலம் பெஷாவர் காண்ட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழா ஒன்றை தொடங்கி வைத்து பேசிய பாஜகவைச் சேர்ந்த அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, “பொது சிவில் சட்டத்தை உருவாக்க உயர்மட்டக் குழு விரைவில் அமைக்கப்படும். உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதும், மற்ற மாநிலங்களும் இதைப் பின்பற்ற வேண்டும்” என்று கோரியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 25 ஆம் தேதி, பாஜகவைச் சேர்ந்த இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில், பொது சிவில் சட்டத்தை (யுசிசி) அமல்படுத்தவுள்ளதாக அம்மாநில பாஜக அரசு அறிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “பொது சிவில் சட்டம் ஒரு நல்ல நடவடிக்கை. இது இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் அதைச் செயல்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.
இரண்டு பாஜக அரசுகளின் கருத்திற்கு அகில இந்திய இஸ்லாமியர் தனிநபர் சட்ட வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தை திசை திருப்பவே பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் இந்திய அரசியலமைப்புக்கு எதிரான இந்த நடவடிக்கையானது இஸ்லாமியர்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அகில இந்திய இஸ்லாமியர் தனிநபர் சட்ட வாரியம் கூறியுள்ளது.
பொது சிவில் சட்டத்தை பெண்களும் ஏன் எதிர்க்க வேண்டும்? – ஆரிஃபா ஜோஹரி
இது தொடர்பாக பேசியுள்ள அகில இந்திய இஸ்லாமியர் தனிநபர் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் காலித் சைபுல்லா ரஹ்மானி கூறுகையில், ஒவ்வொரு குடிமகனும் அவரவர் மதத்தின்படி வாழ நம் நாட்டின் அரசியலமைப்பு அனுமதித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Source: New Indian Express
“பந்து பொறுக்கி போடாதீங்க தமிழிசை”
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.