ஏக்நாத் ஷிண்டே தலைமையில், பாஜக கூட்டணி அரசு நடைபெற்றுவரும் மகாராஷ்டிராவில், அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களுக்கு வரும் தொலைப்பேசி மற்றும் அலைபேசி அழைப்புகளுக்கு, `ஹலோ’ என்று கூறாமல் `வந்தே மாதரம்’ என்று கூறவேண்டும் என அரசு உத்தரவிட்டிருக்கிறது.
இதற்கான சுற்றறிக்கையை, மாநில பொது நிர்வாகத் துறை நேற்று வெளியிட்டது. இந்த உத்தரவு இன்று முதல் மாநிலத்தில் அமலுக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் மாதமே, அமைச்சர் சுதிர் முங்கந்திவார் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில அரசின் சுற்றறிக்கையின்படி அரசு ஊழியர்கள் அனைவரும், பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடமிருந்து அழைப்புகளைப் பெறும்போது, `ஹலோ’ என்பதற்கு பதில் `வந்தேமாதரம்’ என்று கூறவேண்டும். மேலும் இது அரசு, உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்குப் பொருந்தும் என்று கூறப்படுகிறது.
அதோடு இந்த சுற்றறிக்கையில், ‘ஹலோ’ என்ற வார்த்தை அர்த்தமற்றது என்றும், ‘வந்தேமாதரம்’ என்று உரையாடலைத் தொடங்குவது நேர்மறையான சூழ்நிலையை உருவாக்க உதவும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிரா அரசின் இந்த புதிய உத்தரவை பாஜக பாராட்டியிருக்கும் வேளையில், சமாஜ்வாதி கட்சி இதனை, `மக்களைப் பிளவுபடுத்தும் பாஜகவின் மற்றொரு முயற்சி. பாஜகவின் அழுத்தத்திற்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அடிபணிந்துவிட்டார்’ எனச் குற்றம் சாட்டியுள்ளது.
Source : indian express
Vetrimaran Latest Viral Speech about BJP in Thol Thirumavalavan மணிவிழா | Dravidan Politics
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.