கர்நாடகாவில் உள்ள கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமான மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
கைகளில் பதாகைகளை ஏந்தியவாறும், முழக்கங்களை எழுப்பியவாறும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள பேபி சர் சையத் கேட்டில் இருந்து நூற்றாண்டு விழா கேட் வரை மாணவர்கள் பேரணியாக சென்றுள்ளனர்.
ஹிஜாப்புக்கு ஆதரவாக டெல்லி பல்கலை. மாணவர்கள் போராட்டம் – கர்நாடகா மாணவிகளுக்கு பெருகும் ஆதரவு
“ஹிஜாப் மீது தடை விதிப்பது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள, ‘ஒருவர் தன்னுடைய மதத்தைப் பின்பற்றுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமை’யின் மீதான தாக்குதல். அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் தங்கள் மதங்களைப் பின்பற்றுவதற்கான பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமை” என்று பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இஸ்லாத்தை கடைப்பிடிக்கும் அனைவருக்கும் ஹிஜாப் அணிவது ஒரு அடிப்படைக் கடமையாகும். ஒருவரின் மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல், நம் நாட்டின் அமைதியைக் குலைக்கும் முயற்சியாகும்” என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.