Aran Sei

பெட்ரோல் விலை உயர்வு குறித்து அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் – மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்

ன்மோகன் சிங் ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக பேசிய அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார் போன்றவர்கள், தற்போதைய மோடி அரசின் விலை உயர்வு குறித்து தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் நானா படோல் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (பிப்ரவரி 18), மகாராஷ்டிரா மாநிலம் பந்தாரா மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட அம்மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது, “மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக அமிதாப் பச்சன் மற்றும் அக்‌ஷய் குமார் ட்வீட் செய்திருந்தனர். தற்போதைய மோடி அரசின் அநியாய எரிபொருள் விலை உயர்வு குறித்து தங்கள் நிலைப்பாட்டை அவர்கள் தெரிவிக்க வேண்டும். ” என்று அவர் வலியுறுத்தியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜஸ்தானை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் பெட்ரோல் விலை ரூ.100 – தினமும் உயர்ந்து வரும் விலை

“பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை உயர்வு காரணமாக சாமானிய மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. அமிதாப் பச்சன் மற்றும் அக்‌ஷய் குமாரின் படங்களை பார்ப்பதற்கு நாங்கள் பணம் செலுத்துகிறோம். ஆகவே அவர்கள் இப்போது மத்திய அரசின் தேச விரோத கொள்கைகளுக்கு எதிராக நிற்க வேண்டும்.” என்று நானா படோல் கூறியுள்ளார்.

அமிதாப் பச்சன் மற்றும் அக்‌ஷய் குமாரின் படங்களின் வெளியீட்டையும் படப்பிடிப்பையும் நடத்தக்கூடாது என்ற நானா படோலின் கருத்திற்கு என்ன பொருள் என்று கேள்வி எழுப்பிய தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு, “நான் அவர்களுக்கு மிரட்டல் விடுத்து அச்சுறுத்தவில்லை. ஆனால் நடிகர்களின் உண்மை முகத்தை அம்பலப்படுத்த விரும்புகிறேன். பிரபலங்கள் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.” என்று பதிலளித்துள்ளார்.

‘ பெட்ரோல், டீசல் விற்பனையில் கொள்ளை அடிக்கும் மத்திய அரசு, ரூ 38-க்கு பெட்ரோல் வேண்டும் ’ – கே.எஸ்.அழகிரி

மேலும், “மன்மோகன் சிங் ஆட்சியில் அவர்களால் இப்படி செய்ய முடியும்போது, இப்போது ஏன் அவ்வாறு செய்ய முடியாது? அவர்கள் ஏதேனும் அழுத்தத்தில் இருக்கிறார்களா என்றும் ஆராய வேண்டும்.”

“சச்சின் டெண்டுல்கர், லதா மங்கேஷ்கர், ரேகா போன்ற பிரபலங்களை காங்கிரஸ் தன் பங்கு ஒதுக்கீட்டின் கீழ் மாநிலங்களவைக்கு அனுப்பியது . இப்போதாவது பிரபலங்களின் உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வரட்டும். நான் அதைதான் கூற வந்தேன். நாங்கள் எந்த வன்முறையிலும் ஈடுபட மாட்டோம். ஆனால் நாங்கள் கறுப்புக் கொடிகளைக் காட்டி, எங்களின் எதிர்ப்பை தெரிவிப்போம்.” என்று குறிப்பிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் விலை உயர்வு குறித்து அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் – மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்