உத்தரபிரதேசத்தில் நபிகள் நாயகத்தை அவதூறாகப் பேசியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை அம்மாநில காவல்துறையினர் மூர்க்கத்தனமாக தாக்கும் காணொளி ஒன்றை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ளார்.
நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மாவை கைது செய்யக் கோரி இஸ்லாமிய சமூகத்தினர் கடந்த இரு தினங்களாக நாடு தழுவிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
டெல்லி ஜமா மஸ்ஜித், ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித், லூதியானாவின் ஜமா மஸ்ஜித், கொல்கத்தாவின் பார்க் சர்க்கஸ், பிரயாக்ராஜின் அடல் பகுதியில் நுபுர் ஷர்மாவை கைது செய்யக்கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டன.
உ.பி: 144 தடை உத்தரவை மீறி நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக ஊர்வலம் – வழக்கு பதிவு செய்த காவல்துறை
ஜார்க்கண்டின் ராஞ்சியில் நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததில் இரண்டு பேர் மரணமடைந்தனர். மேற்கு வங்கத்தின் ஹவுராவில் நிகழ்ந்த வன்முறையில் பலர் காயமடைந்தனர். உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு அட்டாலா பகுதியில் நடந்த மோதலின்போது கற்கள் வீசப்பட்டன.
இந்நிலையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை அம்மாநில காவல்துறையினர் மூர்க்கத்தனமாக தாக்கும் காணொளி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “இது போன்ற காவல்நிலைய தாக்குதல் குறித்து கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். போலீஸ் காவலில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. உ.பி., மனித உரிமை மீறல்களில் முதலிடத்தில் உள்ளது. அதே சமயம் பட்டியலினத்தவர்கள் ஒடுக்கப்படுவதில் முன்னணியில் இருக்கின்றன” என்று அந்தப் பதிவில் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Source : oneindia
எத்தன பேர் செத்தா மோடி வாய திறப்பாரு? | Aransei Haseef | Peralai Milton
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.