Aran Sei

‘வெறுப்புப் பேச்சு தீவிரவாதம்’- சீக்கிய சமூகத்தை குறிவைத்து வெறுப்பை பரப்புவதாக சீக்கிய தலைமை மதகுரு குற்றச்சாட்டு

சீக்கியர்களின் மிக உயர்ந்த மதபீடமாக கருதப்படும் அகல் தக்த்தில் உள்ள முதன்மை மத குருவான ஜதேதார் ஜியானி ஹர்பிரீத் சிங், சமூக வலைதளங்களில் சீக்கிய சமூகத்தைக் குறிவைத்து, அதற்கு எதிராக ‘வெறுப்புப் பேச்சு தீவிரவாதம்’ பரப்பப்படுவதாக கூறியுள்ளார்.

இது குறித்து, நேற்று(ஜனவரி 8), சண்டிகரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள ஜியானி ஹர்பிரீத் சிங், “பிரதமர் மோடியின் வருகையின் போது நடந்தது துர்வாய்ப்பானது. ஒன்றிய, மாநில அரசுகளின் அதிகாரிகளுக்கு இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் இது நடந்துள்ளது. ஆனால், இச்சம்பவத்திற்கு பிறகு, சமூக வலைதளங்களில் சீக்கியர்கள் குறிவைக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக அவதூறுகள் பரப்பப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

“தீவிரவாதம் என்பது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும் குண்டு வீசி மக்களைக் கொல்வதும் மட்டுமல்ல. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறிவைத்து, அவர்கள்மீது வெறுப்பையும் அவதூறையும் பரப்புவதும் ஒரு வகையான தீவிரவாதம்தான்” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புல்லி பாய் செயலியில் போலி பெயர்கள்: ‘இஸ்லாமியர், சீக்கியர்களிடையே வகுப்புவாத பிரச்சினை உருவாக்க சதி’ – காவல்துறை

“சீக்கியர்களுக்கு எதிரான குரல்களைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தவறிவிட்டது, பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் கூட இதுபோன்ற பரப்புரைகளில் ஈடுபடுகிறார்கள். 1984-ல் என்ன நடந்தது என்பதை மக்களுக்கு நினைவூட்டு, அச்சுறுத்துகிறார்கள்” என்று ஜியானி ஹர்பிரீத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும் இச்சம்பவத்தை காரணமாக வைத்து, பஞ்சாப் மற்றும் பஞ்சாபியர்களை இழிவுபடுத்த சதி நடக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Source: New Indian Express

‘வெறுப்புப் பேச்சு தீவிரவாதம்’- சீக்கிய சமூகத்தை குறிவைத்து வெறுப்பை பரப்புவதாக சீக்கிய தலைமை மதகுரு குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்