அஜ்மீரில் உள்ள சூஃபி துறவி மொய்னுதீன் சிஷ்டியின் சமாதி ஒரு காலத்தில் கோயிலாக இருந்ததாகவும் அதை இந்திய தொல்லியல் துறை இச்சமாதி வளாகத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இந்து அமைப்பு ஒன்று கோரியுள்ளது.
தர்காவின் சுவர்கள் மற்றும் ஜன்னல்களில் இந்து சின்னங்கள் இருப்பதாக மகாராணா பிரதாப் சேனாவைச் சேர்ந்த ராஜ்வர்தன் சிங் பர்மர் தெரிவித்துள்ளார்.
கியான்வாபி மசூதியும் சர்ச்சைக்கான பின்னணியும் – ஒரு விரிவான அலசல்
“குவாஜா கரீப் நவாஸின் தர்கா முன்பு ஒரு பழமையான இந்து கோவிலாக இருந்தது. சுவர்கள் மற்றும் ஜன்னல்களில் ஸ்வஸ்திகா சின்னங்கள் உள்ளன. தர்காவை தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்,” என்று செய்தியாளர்களிடம் ராஜ்வர்தன் சிங் பர்மர் கூறியுள்ளார்.
காதிம்களின் அமைப்பான அஞ்சுமன் சையத் ஜட்கானின் தலைவர் மொயின் சிஸ்டி, சமாதியில் அத்தகைய சின்னம் இல்லாததால் இந்தக் கூற்று ஆதாரமற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்துக்களும் இஸ்லாமியர்களும் லட்சக்கணக்கில் இந்த இடத்துக்கு வருகை தருகின்றனர்.
தர்காவில் ஸ்வஸ்திகா சின்னம் எங்கும் இல்லை என்பதை முழுப் பொறுப்புடன் சொல்கிறேன். 850 வருடங்களாக தர்கா உள்ளது. முன்னர் அப்படி எந்தக் கேள்வியும் எழுந்ததில்லை. எப்போதும் இல்லாத ஒருவிதமான சூழல் இன்று நாட்டில் நிலவுகிறது என்று மொயின் சிஸ்டி தெரிவித்துள்ளார்.
குவாஜா மொய்னுதின் சிஷ்டியின் சமாதி குறித்து கேள்வி எழுப்புவது என்பது மத வேறுபாடின்றி அங்கு பிரார்த்தனை செய்யும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற கூறுகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்று காதிம்களின் அமைப்பான அஞ்சுமன் சையத் ஜட்கானின் தலைவர் மொயின் சிஸ்டி கூறியுள்ளார்.
இந்துக் கோயில்தான் தர்காவாக மாற்றப்பட்டது என்கிற கூற்று மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சி என்று தர்காவின் செயலாளர் வாஹித் ஹுசைன் சிஸ்டி தெரிவித்துள்ளார்.
Source: Thenewindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.