Aran Sei

‘பாஜகவை அதிமுகவினர் சமூக வலைத்தளங்களின் வழியாக அம்பலப்படுத்த வேண்டும்’: அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் கருத்து

காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக குரல் எழுப்பாததை மக்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் வழியாக அம்பலப்படுத்துமாறு அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் அம்மா பேரவை மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“காவிரி நீர் பங்கீடு தமிழக்திற்கு வருவதற்கு பாஜக போர்க்கொடி பிடித்திருக்க வேண்டும். அதுதான் பாஜகவை வளர்க்கும். ஆனால் அதற்கு பதிலாக, பாஜகவினர் ‘அதிமுக பின்னுக்குத் தள்ளப்படும்’ என்ற பிரச்சாரத்தை மறைமுகமாகச் செய்து வருகிறார்கள். அதன்மூலம் வளர்ச்சியடைய நினைக்கின்றனர். இதனால் அதிமுகவினர் எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தமிழக பாஜக நிலைப்பாடு குறித்து சமூக ஊடகங்கள் வழியாக அதிமுகவினர் அம்பலப்படுத்த வேண்டும்” என்று பொன்னையன் பேசியுள்ளார்.

Source : puthiyathalaimurai 

BJP கும்பலின் சாதி வெறி | Sangathamizhan Interview

 

‘பாஜகவை அதிமுகவினர் சமூக வலைத்தளங்களின் வழியாக அம்பலப்படுத்த வேண்டும்’: அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்