Aran Sei

தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கும் பாஜக – அமித் ஷாவிற்கு டிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி. ராமாராவ் கடிதம்

தென் மாநிலங்களுக்குப் பாஜக இழைக்கும் அநீதிகுறித்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ்வின் மகனும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் செயல் தலைவருமான கே.டி. ராமா ராவ் கடிதம் எழுதியுள்ளார்.

ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தெலுங்கானா மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “தெலுங்கானா மக்கள் மத்தியில் பாஜக வெறுப்பை பரப்புகிறது. மக்களுக்கு அளித்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆனால், குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களின் தேவையைப் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றியுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்சேவின் கொள்கையை நேரடியாக ஆதரிப்பவர் பிரதமர் மோடி – தெலுங்கானா அமைச்சர் கே.டி. ராமாராவ் கருத்து

தெலுங்கானா மாநிலத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு நடத்துவதாக குற்றம் காட்டியுள்ள கே.டி. ராமா ராவ், இது தொடர்பாக 27 கேள்விகளை அவர் அமித் ஷாவிடம் எழுப்பியுள்ளார்.

மேலும், தெலுங்கானா மீது உண்மையிலேயே ஒன்றிய அரசு அரசு அக்கறை கொண்டிருந்தால், பொதுக்கூட்ட மேடையில் அமித் ஷா பதிலளிக்கட்டும் என அவர் கூறியுள்ளார்.

தெலுங்கானா மக்களின் உரிமைக்காக நாங்கள் போராடுகிறோம், ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் எங்களின் உரிமையான பங்கைக் கோருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்து-இஸ்லாமியரிடையே வெறுப்பை தூண்டுவதை தவிர தெலுங்கானாவிற்கு பாஜக வேறு எதையும் செய்ததில்லை – அமைச்சர் ராமாராவ் குற்றசாட்டு

ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை பாஜக மறந்துவிட்டது. தெலுங்கானாவிற்கு மத்தியக் கல்வி நிறுவனம், மருத்துவ கல்லூரி கிடைக்காது, மறைந்த அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜின் தேர்தல் வாக்குறுதியான பாசன திட்டத்திற்கு தேசிய அந்தஸ்து வழங்குவது ஆகியன உள்ளடக்கிய 27 கேள்விகளை அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளில் தெலுங்கானாவிற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கே.டி. ராமா ராவிக் கடிதத்திற்கு அமித் ஷாவோ பாஜகவோ இதுவரை பதிலளிக்கவில்லை.

அமித் ஷாவுக்கு எதிர்வினை: ‘மொழிப் பேரினவாதமும் மேலாதிக்கமும் ஒரு பூமராங்’ – தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ்

தேசிய இணைய குற்றங்கள் தடயவியல் ஆய்வகத்தை திறந்து வைக்க தெலுங்கானா செல்லும் அமித் ஷா, கடந்த ஒருமாத காலமாக நடைபெற்ற ‘பிரஜா சங்க்ரம யாத்ரா’வின் இரண்டாம் கட்ட யாத்திரையின் இறுதி நாள் பொதுக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

Source: NDTV 

சீமான் போல சிந்தித்த ராஜபக்சே திவாலான இலங்கை | Nathan Interview | Srilanka Crisis | Seeman | NTK

தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கும் பாஜக – அமித் ஷாவிற்கு டிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி. ராமாராவ் கடிதம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்