மஹாராஷ்டிரா மாநிலத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்படாது என அம்மாநில சட்டமன்ற சபாநாயகர் நானா படோல் தெரிவித்து இருப்பதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக்கோரி, விவசாயிகள் கடந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குடியரசு தினமான இன்று (26.01.21), தலைநகர் டெல்லியில் டிராக்டர் பேரணியை நடத்தி வருகின்றனர்.
அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, கடந்த இரண்டு நாட்களாக நூற்றக்கணக்கான விவசாயிகள் மும்பையை வந்தடைந்துள்ளனர். பேரணியாக வந்த அவர்கள் மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் குவிந்துள்ளனர்.
இந்திய விவசாயிகளை ஆதரித்து இலங்கையில் போராட்டம் – அதானி குழுமத்திற்கு எதிராக எழுப்பப்பட்ட முழக்கம்
இந்நிலையில், குடியரசுத் தினத்தை முன்னிட்டு, மும்பை பகுதியில் கொடியேற்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அங்குக் கூடி இருந்த மக்கள் முன்னிலையில் அம்மாநில சபாநாயகர் உரையாற்றினார்.
வேளாண் சட்டங்கள்பற்றி ஆராய, மகாராஷ்டிரா அரசு, குழு ஒன்றை அமைக்கும் என்றும், வேளாண் சட்டங்கள் மஹாராஷ்டிரா மாநிலத்தில் செயல்படுத்தப்படாது எனவும், படோல் கூறியதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
”முதலில் நான் ஒரு விவசாயி, பின்னர் தான் நான் அரசியலமைப்பு பதவி வகிப்பவன், எனவே நான் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவே வந்திருக்கேன்” எனப் பட்டாலே கூறியதாக அந்தச் செய்தியில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று (25.01.2021), ஆசாத் மைதானத்தில் கூடியிருந்த விவசாயிகள் மத்தியில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மஹாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் பாலா சகேப் தொராட் ஆகியோர் உரையாற்றினர்.
அந்த கூட்டத்தில், மனு கொடுக்க வந்த விவசாயிகளை சந்திக்காமல், மஹாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கோவா சென்று இருப்பதாகவும், கங்கனா ரணாவத்தை சந்திக்க நேரம் இருக்கும் ஆளுநருக்கு, விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லையெனச் சரத் பவார் பேசியதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.
தடுப்புகளை மீறி டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் : தொடங்கவுள்ள டிராக்டர் பேரணி
இதே காரணங்களுக்காக, ஆளுநரை அம்மாநில சபாநாயகர் விமர்சித்துள்ளார்.
”யாருடைய உத்தரவுகளின் பெயரில் ஆளுநர் செயல்படுகிறாரென அனைவருக்கும் தெரியும். விவசாயிகளை ஏன் அவர்கள் சந்திக்கவில்லை என்பது குறித்து பேச விரும்பவில்லை” எனப் சபாநாயகர் நானா படோல் பேசியிருப்பதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.