ரூ. 8,308 கோடி மதிப்பிலான 6.25 மில்லியன் டன் (மெட்ரிக் டன்) நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தங்களை அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான (ஜென்கோ) நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்.டி.பி.சி) வழங்கியுள்ளது.
உள்நாட்டு நிலக்கரி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக 10 விழுக்காடு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை கலக்குமாறு ஒன்றிய அரசின் மின்சாரத் துறை அமைச்சகம் தெரிவித்ததைத் தொடர்ந்து இறக்குமதிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
4 தனித்தனி நிறுவனங்களிடம் இருந்து மொத்தமாக 6 ஒப்பந்தங்கள் பெறப்பட்ட நிலையில் அனைத்து ஒப்பந்தங்களும் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு நிலக்கரி நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து நிலக்கரி வாங்குவதன் மூலம் என்.டி.பி.சியின் எரிபொருள் செலவு யூனிட் ஒன்றுக்கு ரூ. 2 ஆக இருக்கும் நிலையில், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியைப் பயன்படுத்தும்போது யூனிட் ஒன்றுக்கு ரூ 7 முதல் 8 வரை அதிகரிக்கும். இதன்மூலம், மக்களுக்கான மின் கட்டணத்தில் 70 முதல் 80 பைசா வரை அதிகரிக்கும் என்று என்.டி.பி.சியின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாட்டின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு உள்நாட்டு நிலக்கரி கையிருப்பு இல்லை என்பதை ஒப்புக்கொண்ட ஒன்றிய அரசு, பருவமழை தொடங்குவதற்கு முன்பு நிலக்கரியை இறக்குமதி செய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கும் இரண்டு வாரங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது.
எவ்வாறாயினும், நாட்டில் போதுமான கையிருப்பு இருப்பதாகவும், முன்கூட்டியே இருப்பு வைக்கப்பட வேண்டும் என்றும் நிலக்கரி அமைச்சகம் கூறியுள்ளது.
Source: Business Standard
Nupur Sharma செஞ்ச தப்புக்கு இந்தியர்கள் ஏன் மன்னிப்பு கேட்கணும்? Nupur Sharma on Prophet Muhammad
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.