இந்திய ராணுவத்தில் ‘அக்னிவீரர்’ ஒரு தனித்துவமான ரேங்க் அமைக்கும் என்றும், இது தற்போதுள்ள மற்ற அணிகளிலிருந்து வேறுபட்டதாக இருக்கும் என்றும் ராணுவம் கூறியது.
முன்னதாக, ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அக்னிபத் திட்டத்தின்படி ராணுவத்தில் 17.5 முதல் 21 வயதுள்ள 45 ஆயிரம் பேர், 4 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளனர். இதன்மூலம் இளைஞர்களுக்கு பணிபுரிய வாய்ப்பு கிடைப்பதோடு, ஆயுதப்படை இளம் வீரர்கள் படையாகும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதற்கான ஆட்கள் தேர்வு அடுத்த 90 நாட்ள்களில் ஆன்லைன் முறையில் நடக்கவுள்ளது. இதில் தேர்வாகும் இளைஞர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள். ஆயுதப்படைக்கு வழக்கமாக ஆட்கள் தேர்வு செய்வதற்கான கல்வி தகுதியே, அக்னிவீரர்களுக்கும் பொருந்தும். அதன்படி, புதிய தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட மட்டங்களில் பயிற்சி வழங்கப்படும். பல்வேறு துறைகளில், புதிய திறன்களுடன் வேலைவாய்ப்புகளை இந்த திட்டம் உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பர். இதற்காக மாத சம்பளம் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரத்துடன் படிகளும் வழங்கப்படும். மருத்துவ மற்றும் காப்பீடு வசதிகளும் வழங்கப்படும்.
4 ஆண்டுகளுக்குப் பின்னர், 25 சதவீத வீரர்களுக்குப் பணி நீட்டிக்கப்பட்டு, ஆயுதப்படைகளில் 15 ஆண்டுக்காலம் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். ஆயுதப்படையில் சேர முடியாதவர்களுக்கு 11 லட்சம் முதல் 12 லட்சம் வரை நிதி வழங்கப்படும். ஆனால், அவர்கள் ஓய்வூதிய பலன்கள் பெற முடியாது. இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், ராணுவத்தின் செலவு குறையும் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.
வாரணாசி விமான நிலையம் – சமஸ்கிருதத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியீடு
இந்நிலையில், இந்திய ராணுவத்தில் ‘அக்னிவீர்ர்’ ஒரு தனித்துவமான ரேங்க் அமைக்கும் என்றும், இது தற்போதுள்ள மற்ற அணிகளில் இருந்து வேறுபட்டதாக இருக்கும் என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் 1923-ன் கீழ், நான்கு ஆண்டு கால சேவைக் காலத்தில் பெறப்பட்ட ரகசியத் தகவல்களை எந்த ஒரு அங்கீகரிக்கப்படாத நபருக்கோ அல்லது ஆதாரத்திற்கோ வெளியிடுவதில் இருந்து அக்னிவீர்ர்கள் தடைசெய்யப்படுவார்கள் என்று ராணுவம் கூறியுள்ளது.
இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், மருத்துவப் பிரிவு தொழில்நுட்பப் பிரிவு பணியாளர்களைத் தவிர, அக்னிவீரராக நிச்சயக்கப்பட்ட காலத்தை முடித்த நபர்களுக்கு மட்டுமே இந்திய ராணுவத்தின் வழக்கமான கேடரில் ராணுவ வீரர்களாக பணியாற்ற முடியும்.
“நிச்சயக்கப்பட்ட காலத்தை முடிப்பதற்கு முன், சொந்த வேண்டுகோளின் பேரில் அக்னிவீரரை விடுவிப்பது அனுமதிக்கப்படாது என ராணுவம் தெரிவித்துள்ளது. தகுதிவாய்ந்த அதிகாரி அனுமதிக்கப்பட்டால் விடுவிக்கப்படலாம்” என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
நான்கு வருட பதவிக் காலம் முடிந்த பிறகு, ராணுவத்தில் அக்னிவீரர்கள் நீட்டிக்கப்படுவதற்கு எந்த உத்தரவாதமும் வழங்க முடியாது. ஒவ்வொரு ‘அக்னிவீரரும்’ ‘அக்னிபத்’ திட்டத்தின் அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் முறையாக ஏற்க வேண்டும். 18 வயதிற்குட்பட்ட பணியாளர்களுக்கு, ஆவணத்தின் படி, பெற்றோர் அல்லது பாதுகாவலர்களால் பதிவு படிவத்தில் கையொப்பமிட வேண்டும்.
வழக்கமான சேவையில் இருப்பவர்களுக்கு 90 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். ‘அக்னிவீரர்களுக்கு ஒரு வருடத்தில் 30 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும். மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் மருத்துவ விடுப்பு வழங்கப்படும்.
Source: thehindu
Agnipath திட்டம் ராணுவத்தையே முடக்கிடும் EX Indian Army K Malaiappan Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.