ஒன்றிய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், இந்த திட்டம் இந்திய அரசியலமைப்பிற்கு முரணான மற்றும் நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் ஆயுதப் படைகளுக்கான நூற்றாண்டு கால தேர்வு முறையை அரசு ரத்து செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
”அரசியலமைப்பு விதிகளுக்கு மாறாக, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறாமல், அரசிழதில் அறிவிப்பு வெளியிடாமல் நூற்றாண்டு கால பழமையான ராணுவத் தேர்வு முறையை ரத்து செய்துவிட்டு, அக்னிவீர்-22 திட்டத்தைத் திணித்துள்ளது. மேலும் ஜூன் 24 தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.” என்று வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டம் சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்புக்கு எதிரனது. எனவே ஒன்றிய அரசால், ஜூன் 14 தேதி வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Source: Hindustan Times
Army Man Interview on Agnipath | பாஜக செய்வது தேசபக்தியா தேசத்துரோகமா? | Dr Poovannan
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.