ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்க்கும் ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் பீகாரில் மட்டும் ரூ. 200 கோடி மதிப்பிலான ரயில்வே சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.
இது தொடர்பாக தெரிவித்துள்ள டானாபூர் கோட்ட ரயில்வே மேலாளர் பிரபாத் குமார், ”50 ரயில் பெட்டிகள் மற்றும் 5 ரயில் இஞ்சின்கள் மீண்டும் பயன்படுத்த முடியாத வகையில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
நடைமேடைகள், தொழில்நுட்பக் கருவிகள், கணினிகள் ஆகியவற்றை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதனால், பீகாரில் மீண்டும் ரயில்சேவை தொடங்குவதில் கடும் சிரமங்கள் உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அக்னிபத் திட்டம்: சென்னை தலைமைச் செயலகம் அருகே இளைஞர்கள் போராட்டம்
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலில் பீகார் மாநிலத்தில் போராட்டம் தொடங்கியது. பின்னர், உத்தரபிரதேசம், ஹரியானா, தெலுங்கானா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் போராட்டங்களில் ஏற்படும் வன்முறை காரணமாக பீகார் மாநிலத்தின் 12 மாவட்டங்களில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இதேப் போன்று ஹரியானா மாநிலத்தில் இணைய சேவை மற்றும் குறுஞ்செய்தி சேவை முடக்கப்பட்டுள்ளது.
Source: Puthiyathalaimurai
எங்க கனவ நாசமாக்கிட்டாங்க கதறும் இளைஞர்கள் Agnipath Protest Tamilnadu | Indian Army | Agneepath
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.