அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிரமாக போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில், இத்திட்டம் இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதோடு மட்டுமின்றி, நமது நாட்டின் பாதுகாப்புடனும் விளையாடுகிறது என்று சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தில் ஆயுத பயிற்சி பெற்ற 23-24 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டு ராணுவ வேலை முடித்து விட்டுத் திரும்பி வரும் போது எந்த வேலையும் கிடைக்காமல், ஒரு கும்பலை உருவாக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடும் ஆபத்துள்ளது என்று பூபேஷ் பாகெல் எச்சரித்துள்ளார்.
காவல்துறை தொடர்பான பணிகளில் இந்த ‘அக்னிவீர்களுக்கு’ முன்னுரிமை அளிப்பதாக பாஜக ஆளும் மாநிலங்கள் அறிவித்துள்ளன. ஆனால் “இராணுவமும் காவல்துறையும் இரண்டு வெவ்வேறு நோக்கமுள்ள வேலைகள். ஒரு இராணுவ வீரருக்கு நண்பர் மற்றும் எதிரி என்ற இரண்டு விஷயங்கள் மட்டுமே தெரியும், ஆனால் காவல்துறையினர் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் ஈடுபடுகிறார்கள். ஆகவே இந்த அறிவிப்பினால் எந்த பயனும் இல்லை என்று சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல் தெரிவித்துள்ளார்.
Source : The New Indian Express
அக்னிபத் திட்டம் எதிரொலி பற்றி எரியும் பாஜக அலுவலகம் Piyush Manush
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.