Aran Sei

அக்னிபத் திட்டம்: எத்தனை போராட்டக்காரர்களின் வீடுகள் இப்போது புல்டோசர்களால் இடிக்கப்படும் – ஒவைசி கேள்வி

Asaduddin-Owaisi-TW-1579431006

க்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், எத்தனை போராட்டக்காரர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்படும் என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளரான நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கள் சம்பந்தமாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டதன் பின்னணியில் அவர் இந்த கேள்வியை கேட்டுள்ளார்.

எந்தவொரு உயிரையும் மதம், ஜாதி என்று பிரித்துப் பார்க்கக் கூடாது – சர்ச்சை பேட்டி குறித்து சாய் பல்லவி கருத்து

“பிரதமர் நரேந்திர மோடியின் தவறான முடிவால் இளைஞர்கள் தெருக்களில் போராடிக் கொண்டுள்ளனர். எத்தனை போராட்டக்காரர்களின் வீடுகள் புல்டோசர்களால் இடிக்கப்படும்” என்று ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் நீங்கள் யாருடைய வீட்டையும் இடிக்க நாங்கள் விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், போராட்டக்காரர்கள் குழந்தைகளைப் போன்றவர்கள் என்றும் அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் கூறினார். அப்படியானால், இஸ்லாமியர்கள் உங்களுக்குக் குழந்தைகளாக தெரியவில்லையா என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். நாங்களும் இந்த நாட்டின் குழந்தைகள்தான் என்று ஒவைசி தெரிவித்துள்ளார்.

பாஜகவில் இடைநீக்கம் செய்யப்பட்ட நுபுர் சர்மா விரைவில் ஒரு “பெரிய தலைவராக” ஆக்கப்படுவார் என்றும் கட்சியின் டெல்லி முதல்வர் வேட்பாளராக கூட நியமிக்கப்படலாம் என்று ஒவைசி கூறியுள்ளார். ஏனெனில் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை நீங்கள் எந்த அளவிற்கு துன்புறுத்துகிறீர்களோ அந்த அளவிற்கு நீங்கள் பெரிய தலைவராக மாறுவீர்கள். அதுதானே நம் நாட்டின் யதார்த்தம் என்று ஒவைசி தெரிவித்துள்ளார்.

Source : NDTV

அக்னிபத் திட்டம் எதிரொலி பற்றி எரியும் பாஜக அலுவலகம் Piyush Manush

அக்னிபத் திட்டம்: எத்தனை போராட்டக்காரர்களின் வீடுகள் இப்போது புல்டோசர்களால் இடிக்கப்படும் – ஒவைசி கேள்வி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்