அக்னிபத் திட்டம் அவசரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பாஜக தன்னுடைய அடித்தளத்தை இழந்துள்ளதை காட்டுகிறது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாயாவதி, “புதிய ‘அக்னிபத்’ திட்டம் நாட்டை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை பாதித்த ‘நோட்டுப்பந்தி’ (பணமதிப்பிழப்பு) மற்றும் ‘தாலாபந்தி’ (கொரோனா முழு ஊரடங்கு) போன்று அக்னிபத்தும் அவசரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர்கள்(மக்கள்) கோபத்தில் உள்ளனர். ஆணவ மனப்பான்மையை அரசு தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக தலைவர்களின் கட்டுப்பாடற்ற அறிக்கைகளும் குறுகிய அரசியல் கண்ணோட்டமும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இராணுவத்திற்கு சிரமங்களை உருவாக்கும் இம்மாதிரியான திட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
அக்னிபத் குறித்து, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குறிப்பிடும்போது “இத்திட்டத்தால் இளைஞர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர், அவர்களின் எதிர்காலம் குறித்த பயம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு அவர்களுக்கு மேலோங்கியுள்ளது. இது நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானது என்பதை நிரூபிக்கும். நிகழ்காலத்தை மேம்படுத்துவதும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பு. அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வலுப்பதால் பாஜக தனது ஆதரவு தளத்தை இழந்துவிட்டதை காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
17 மற்றும் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களை ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் சேர்த்துக் கொள்வதற்கான திட்டம் ஒன்றிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ஆட்கொண்ர்வு செய்வதால் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்தது.
பின்னர், ஆட்சேர்ப்புக்கான அதிகபட்ச வயது வரம்பை 23 ஆக தளர்த்தியது.
Source: Thenewindianexpress
பற்ற வைத்த வட இந்தியர்கள் அஞ்சி நடுங்கும் பாஜக | Agnipath | Bulldozer Baba | Narendra Modi
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.