Aran Sei

ராஜஸ்தானை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் பெட்ரோல் விலை ரூ.100 – தினமும் உயர்ந்து வரும் விலை

ராஜஸ்தான் மாநிலத்தை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் பெட்ரோல் விலை மூன்றிலக்க எண்ணைத் தொட்டு, நூறு ரூபாயை கடந்துள்ளது.

இன்று (பிப்ரவரி 18), மத்திய பிரதேசத்தில் அனுப்புர் மாவட்டத்தில், பெட்ரோல் லிட்டருக்கு 34 பைசா உயர்ந்து, ரூ.100.25-க்கும், டீசல் லிட்டருக்கு 32 பைசா உயர்ந்து ரூ.90.35-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், புதுடெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ .89.88 ஆகவும், டீசல் ரூ .80.27 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. பொருளாதார தலைநகரான மும்பையில், பெட்ரோல் விலை ரூ .96.32 ஆகவும். டீசல் விலை ரூ .87.32 ஆகவும் உள்ளது.

பெட்ரோல் விலை உயர்வுக்கு முந்தைய ஆட்சியே காரணம் – நரேந்திர மோடி

மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகளின் அடிப்படையில், எரிபொருளுக்கான விலைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். நாட்டிலேயே எரிபொருளுக்கு மதிப்புக்கூட்டு வரி (வாட்) அதிகம் வசூலிக்கும் மாநிலமான ராஜஸ்தானில், தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாட்டிலேயே அதிகமாகவுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக, மத்திய பிரதேசம் உள்ளது.

மத்தியப் பிரதேசம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 33 சதவீதம் மாநில வரியும், கூடுதலாக ரூ.4.5 வசூலிக்கப்படுகிறது. மேலும், ஒரு சதவீதம் செஸ் வரியும் வசூலிக்கப்படுகிறது. டீசல் ஒரு லிட்டருக்கு 23 சதவீதம் மாநில வரியும், கூடுதகாக ரூ.3 மற்றும் ஒரு சதவீத செஸ் வரியும் வசூலிக்கப்படுகிறது.

‘ பெட்ரோல், டீசல் விற்பனையில் கொள்ளை அடிக்கும் மத்திய அரசு, ரூ 38-க்கு பெட்ரோல் வேண்டும் ’ – கே.எஸ்.அழகிரி

கடந்த வாரம் மாநிலங்களவையில் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தற்போது மத்திய அரசிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை குறைக்கும் எண்ணமில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

சர்வதேச விலை பட்டியல் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களின் அடிப்படையில், வாகன எரிபொருள் விலைகள் தினசரி மாற்றியமைக்கப்படுகிறது.

ராஜஸ்தானில் 100 ரூபாயை தொட்ட பெட்ரோல் விலை – அனைத்து நகரங்களிலும் புதிய உச்சத்தில் எரிவாயு விலை

நேற்று (பிப்பிரவரி 17), நாட்டிலேயே முதன்முறையாக, ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் பெட்ரோல் விலை மூன்றிலக்க எண்ணைத் தொட்டு, நூறு ரூபாயை கடந்தது. இந்நிலையில், தமிழகத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை காணொலி மூலம் திறந்து வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு, முந்தைய அரசுகளே காரணம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் பெட்ரோல் விலை ரூ.100 – தினமும் உயர்ந்து வரும் விலை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்