ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் அப்தோலியனுடனான இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் சந்திப்பின்போது, முஹம்மது நபிகள் விவகாரம் குறித்து விவாதிக்கவில்லை என்று இந்திய வெளியுறவுத் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முஹம்மது நபிகள் குறித்து பாஜக பிரமுகர்கள் தெரிவித்திருந்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இதற்குச் சர்வேதேச அளவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
பல்வேறு இஸ்லாமிய நாடுகள், இந்திய தூதர்களை அழைத்து அவர்களது கண்டனங்களை பதிவு செய்தன.
முஹம்மது நபியை அவமதித்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை – ஈரானின் கோரிக்கையை ஏற்ற இந்திய அரசு
இந்நிலையில் ஈரானின் வெளியுறவு அமைசர் அமீர் அப்தோலியான் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரின் முதல் நாள் பயணத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது முகமது நபிகுறித்து அவதூறு கருத்து கூறப்பட்ட விவகாரத்தை ஈரான் அமைச்சர் எழுப்பியதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி, “அமைச்சர் ஜெய்சங்கர் உடனான சந்திப்பின்போது முகமது நபி விவகாரத்தை ஈரான் அமைச்சர் எழுப்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகருடான சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “ஈரானிய பிரதிநிதிகளுக்குத் தோவல் உத்தரவாதம் அளித்ததை மறுப்பதா என்பது குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
Source: The Wire
மிரட்டும் திமுக பதுங்கும் Subramanian Swamy | Haseef | Makizhnan | Periyar | DMK | MK Stalin
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.