Aran Sei

பெண்கள் மீதான தாலிபான்களின் நிலைப்பாடு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது – ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா மகளிர் துணைத் தலைவர் கண்டனம்

ப்கானிஸ்தானில் பெண்கள் மீதான தாலிபான்களின் நிலைப்பாடு குறித்தத் தெளிவின்மை  அந்நாடு முழுதும்  “நம்பமுடியாத அளவுக்கு அச்சத்தை ”  உருவாக்கியுள்ளது  என்று ஐக்கிய நாடுகள் அவையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், தினந்தோறும்  பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவது குறித்து வெளியாகும் செய்திகளுக்கு தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து  தெரிவித்துள்ள    ஐ.நா மகளிர் துணைத் தலைவர்(ஆப்கானிஸ்தான்) அலிசன் டேவிடியன், “ஆப்கானில் சில பெண்கள் ஆண் உறவினர்களின் துணையின்றி  வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிமறுக்கப் படுகிறது. சில மாகாணங்களில் பெண்கள் வேலையை விட்டு நிற்க அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.” என்று  கூறியுள்ளார் 

மேலும் , “வன்முறையிலிருந்து தப்பியோடும் பெண்களுக்கான பாதுகாப்பு மையங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன  என்றும்,  மனிதஉரிமை ஆர்வலர்களுக்கான பாதுகாப்பு வீடுகள் நிரம்பி உள்ளன”.என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source:NDTV

 

பெண்கள் மீதான தாலிபான்களின் நிலைப்பாடு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது – ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா மகளிர் துணைத் தலைவர் கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்