தடுப்பூசி போட்டுக்கொள்ளுவது குறைந்து வருவதால், எங்களிடம் விற்கப்படாத தடுப்பூசிகள் நிறைய உள்ளன என்றும் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அன்று உற்பத்தியை நிறுத்தி விட்டோம் என்று சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் கொரோனா தடுப்பூசிகளைத் தயாரித்து, விற்பனை செய்து வந்தது.
இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 22), சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியுள்ளார். அப்போது, “கொரோனா தொற்றுநோயின் முதல் இரண்டு அலைகளில் மக்கள் வலிகளை அனுபவித்தார்கள். அவ்வலிகளை மீண்டும் பார்க்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இரண்டுவது டோஸுக்கும் மூன்றாவது டோஸுக்கும் இடையேயான இடைவெளியை ஒன்பது மாதங்களில் இருந்து ஆறு மாதங்களாக குறைக்க வேண்டும் என்று மக்கள் நலன் கருதி இதனை நான் தொடர்ந்து கூறி வருகிறேன். நான் பணம் சம்பாதிப்பதற்காக கூறவில்லை. ஏற்கெனவே அது என்னிடம் போதுமான அளவு உள்ளது” என்று கூறியுள்ளார்.
“தடுப்பூசி போட்டுக்கொள்ளுவது குறைந்து வருவதால், எங்களிடம் விற்கப்படாத தடுப்பூசிகள் நிறைய உள்ளன. 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அன்று உற்பத்தியை நிறுத்தி விட்டோம். தற்போது, 20 கோடி டோஸ்களை வைத்திருக்கிறோம். ஒரு தடுப்பு மருந்தின் விலை ரூ.600 லிருந்து ரூ.225 ஆக குறைத்த பிறகும் மக்கள் தடுப்பூசிகளை குறைவாக எடுத்துக்கொள்வதற்கு அதிகரித்து வரும் சோர்வே முக்கிய காரணம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இரண்டுவது டோஸுக்கும் மூன்றாவது டோஸுக்கும் இடையேயான இடைவெளியை ஒன்பது மாதங்களில் இருந்து ஆறு மாதங்களாக குறைக்க வேண்டியது மிகவும் அவசியம். தடுப்பூசி இடைவெளியை அதிகரிக்கும் போது ஆன்டிபாடி குறைகிறது என்பதை உலக அளவிலான ஆய்வுகள் காட்டுகிறன. 7-11 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு அரசின் ஒப்புதலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்று ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
Source: PTI
“சீமானை இயக்குவது பார்ப்பனியம் தான்”
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.