Aran Sei

உலகின் 3 வது பெரிய பணக்காரராக மாறினார் அதானி – ஆசியாவை சேர்ந்த பணக்காரர் ஒருவர் இந்த அந்தஸ்தை அடைவது இதுவே முதல் முதல் முறையாகும்.

சுமார் ரூ.11 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் எலோன் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோஸை தொடர்ந்து உலகின் மூன்றாவது பெரிய பணக்காரராக அதானி உருவெடுத்துள்ளார். ஆசியாவை சேர்ந்த பணக்காரர் ஒருவர் உலகின் 3 வது பெரிய பணக்காரராக உயர்வது இதுவே முதல் முறையாகும்.

அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி, ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி உலகின் மூன்றாவது பெரிய பணக்காரராக உயர்ந்துள்ளார். எலோன் மஸ்க் சுமார் ரூ.20 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்திலும், ஜெஃப் பெசோஸ் சுமார் 12 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

அதானி 2022 இல் மட்டும் சுமார் ரூ.5 லட்சம் கோடி சொத்து சேர்த்துள்ளார். இது மற்ற எந்தவொரு உலக பணக்காரர்கள் ஈட்டிய சொத்தை விடவும் 5 மடங்கு அதிகமாகும்.

உலகப் பணக்காரர் வரிசை: 4 வது இடத்தில் அதானி – தினக்கூலிகளின் தற்கொலை விகிதம் 10% உயர்ந்திருப்பதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை

2022 பிப்ரவரியில் ஆசியாவின் பெரிய பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி ஆசியாவின் முதல் பணக்காரராக அதானி உயர்ந்தார். கடந்த மாதம் உலகின் 4 ஆவது பெரிய பணக்காரரான பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி உலகின் 4 ஆவது பெரிய பணக்காரராக அதானி மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமம் இப்போது இந்தியாவின் மிகப்பெரிய தனியார்த் துறை துறைமுகம் மற்றும் விமான நிலைய ஆபரேட்டர், நகர-எரிவாயு விநியோகம் மற்றும் நிலக்கரி சுரங்கத்திற்கு சொந்தமானது. மேலும், உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளராக மாற, பசுமை ஆற்றலில் சுமார் 5.5 லட்சம் கோடி முதலீடு செய்வதாக அதானி கடந்த நவம்பர் மாதம் உறுதியளித்திருந்தார்.

அதானி குழுமத்தின் வளர்ச்சியானது பெரும்பாலும் கடன்கள் கொடுத்து வளர்க்கப்பட்டதாகும் என்று இந்த மாதம் கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான கிரெடிட் சைட்ஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : the hindu

Kallakurichi Sakthi International School Issue | Who is the teacher? | Advocate Dhamayandhi

உலகின் 3 வது பெரிய பணக்காரராக மாறினார் அதானி – ஆசியாவை சேர்ந்த பணக்காரர் ஒருவர் இந்த அந்தஸ்தை அடைவது இதுவே முதல் முதல் முறையாகும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்