பிரபல நடிகர் விவேக் மாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (ஏப்ரல் 16), சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்த நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
”மாரடைப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் நடிகர் திரு.விவேக் அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.” தமிழ்நாடு துணை முதலைமச்சர் ஒ.பண்ணீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தி தெரிவித்துள்ளார்.
நேற்று (ஏப்ரல் 15), நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.