குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மொட்டேரா கிரிக்கெட் மைதானத்திற்கு மீண்டும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பெயரை வைக்க வேண்டும் எனக் கூறி பிரதமர் மோடிக்கு சர்தார் வல்லபாய் பட்டேலின் சொந்த மாவட்டமான கெடாவைச் சேர்ந்த 11 பேர் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் அவர்கள் ரத்தத்தால் கையெழுத்திட்டுள்ளனர்.
பிப்ரவரி 24, 2021 ஆம் தேதி சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்திற்கு நரேந்திர மோடி மைதானம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
மைதானத்திற்கு சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானம் என்று பெயரிடப்படுவதை உறுதி செய்வதை ஒரே நோக்கமாகக் கொண்டு, கெடா மாவட்டத்தில் சர்தார் சம்மன் சங்கல்ப் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
“சர்தார் வல்லபாய் படேல் 562 சமஸ்தானங்களை இந்திய யூனியனுடன் ஒருங்கிணைத்தார். சர்தார் வல்லபாய் படேலின் பெயரை நரேந்திர மோடி மைதானம் என்று பெயர் மாற்றம் செய்தது சர்தாரின் அவமதிப்பு” என்று ரத்ததில் கையெழுத்திடப்பட்ட அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
“கடிதம் வெறும் அடையாள எதிர்ப்பு மட்டுமே. இந்த மைதானத்திற்கு சர்தார் வால்பாய் படேல் பெயரை மாற்றாவிட்டால் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்” என்று கையெழுத்திட்டவர்களில் ஒருவரான அதுல் படேல் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அகமதாபாத்தில் உள்ள மொட்டேரா மைதானம் புதிப்பிக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக திறக்கப்பட்டது. சர்தார் பட்டேல் என்ற பெயரில் இருந்த மைதானம் புதுப்பிக்கப்பட்ட பின்னர், நரேந்திர மோடி மைதானம் என பெயரிடப்பட்டது. மைதானம் அமைந்திருக்கும் வளாகத்திற்குள் சர்தார் பட்டேல் பெயர் வைக்கப்பட்டது.
Source: The Wire
‘அதானிக்கே கொடுங்க’ – கட்டாயப்படுத்திய மோடி | இலங்கையில் நடந்த களேபரம் | Modi | Gotabaya Rajapaksa
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.