Aran Sei

இழப்பீடு தராமல் விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்துவது சட்டத்தை மீறும் செயல் – உச்ச நீதிமன்றம்

ழப்பீடு தராமல் விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்துவது  அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயலாகும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, சாலைகளை விரிவுபடுத்துவதற்காக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காதது எந்த நியாயமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

அசாம்: ஐந்து நாள் போலீஸ் காவல் வைக்கப்பட்டுள்ள ஜிக்னேஷ் மேவானி

”சாலையை நிர்மாணிப்பது அல்லது விரிவுபடுத்துவது சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு பொது நோக்கமாக இருக்கும். ஆனால் இழப்பீடு வழங்காததற்கு எந்த நியாயமும் இல்லை. இது. அரசியலமைப்பின் 300A விதியை தெளிவாக மீறுவதாகும்” என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மனுதாரர் தரப்பில் கூறும் போது, சுல்தான் பத்தேரி பைபாஸ் சாலை அமைக்கவோ அல்லது விரிவாக்கம் செய்யவோ தங்கள் நிலத்தை பயன்படுத்துமாறு ஊராட்சி மன்றத்தினர் கோரிக்கை விடுத்தனர். மேலும், நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்தனர். .

ஆனால், சாலை அமைக்கும் போது எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை. கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதும், அது முடிந்த பிறகும் மேல்முறையீடு செய்தவர்கள், தங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்காததால் பாதிக்கப்பட்டவர்கள்  உயர் நீதிமன்றத்தை அணுகினர்.

“நிலம் அவர்களுடைய வாழ்வாதாரத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மக்களின் வாழ்வாதாரத்தையும் சொத்துக்களையும் பறிப்பது அரசியலமைப்பின் பிரிவு 21 மற்றும் பிரிவு 300A ஐ மீறுவதாகும்” என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

சட்டப்பிரிவு 300A, அடிப்படை உரிமையாக இல்லாவிட்டாலும், சட்டப்பூர்வ உரிமை என்ற அந்தஸ்தைக் கொண்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆந்திரா: ஆம்புலன்ஸுக்கு அதிக பணம் கேட்ட ஊழியர்கள் – உயிரிழந்த மகனை 90 கி.மீ பைக்கில் கொண்டு சென்ற தந்தை

சட்டத்தின் அதிகாரம் இல்லாமல் எந்தவொரு குடிமகனும் அவரது சொத்தை இழக்க மாட்டார். ஒருவரின் சொத்தை, கையகப்படுத்துவதற்கு பல்வேறு வழிமுறைகள் சட்ட்த்தில் உள்ளது. எடுத்துக்காட்டாக நிலத்தை பரிமாற்றிக்கொள்ளலாம். கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீட்டை வழங்கலாம். இவ்வாறு வாழிகள் இருக்க பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு தராமல் நிலத்தை கையகப்படுத்தியது சட்டப்படி நியாயமில்லாத்து..

பஞ்சாயத்து மற்றும் பொதுப்பணித் துறையும் கூட, மேல்முறையீடு செய்தவர்கள் தாமாகவே முன்வந்து தங்கள் நிலத்தை ஒப்படைத்துள்ளனர் என்பதற்கு ஆதரவாக எந்த ஆவணத்தையோ  ஆதாரத்தையோ சமர்ப்பிக்கத் தவறிவிட்டனர். மறுபுறம், மேல்முறையீடு செய்தவர்கள் தங்கள் நிலத்தை தாமாக முன்வந்து பஞ்சாயத்துக்கு கொடுக்கவில்லை என்றும், அவர்களுக்குரிய இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

source: newindianexpress

பந்து பொறுக்கி போடாதீங்க தமிழிசை

இழப்பீடு தராமல் விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்துவது சட்டத்தை மீறும் செயல் – உச்ச நீதிமன்றம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்