கோயம்பத்தூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் பலி.
நேற்று (ஜூன் 8), கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இக்கரைபோளுவாம்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், பணிகளை முடித்து அலுவலகம் திரும்புயுள்ளனர். அப்போது, ஆலந்துறையில் அனைவருக்கும் சம்பளம் பணத்தை வங்கியில் இருந்து எடுத்துக்கொண்டு ஊராட்சி அலுவலகத்திற்கு செல்ல, ஊராட்சியின் குப்பை அள்ளும் வாகனத்தில் ஆண், பெண் உட்பட எட்டு பணியாளர்கள் புறப்பட்டுள்ளனர்.
ஆலாந்துரையில் இருந்து இக்கரை போளுவாம்பட்டி நோக்கி வாகனத்தை ராசு என்பவர் ஓட்டி வந்த நிலையில், நொய்யல் பாலத்தை வாகனம் கடக்கும் பொழுது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதில் பழனிச்சாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் சிக்கியவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலந்துறை காவல்துறையினர் பலத்த காயங்களுடன் விபத்தில் சிக்கியவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து, ஆலாந்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக, அறிக்கை வெளியிட்டுள்ள திராவிட பண்பாட்டு கூட்டமைப்பின் கோவை கிளை, பெண்கள் உள்பட மேலும் 8 பேர் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
“தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்திட வேண்டும். இந்த விபத்து குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.” என்று திராவிட பண்பாட்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.