Aran Sei

டெல்லி: 53 கோவில்களை இடிக்க திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசு முடிவு – ஆம் ஆத்மி உறுப்பினர் குற்றச்சாட்டு

Credit: India Today

நாடு முழுவதும் மதத்தின் பெயரால் பாஜக அரசியல் செய்து வரும் நிலையில், டெல்லியில் 53 கோவில்களை இடிக்க பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

53 கோவில்களை இடிப்பதற்கு அனுமதி கேட்டு டெல்லி அரசின் மதக் குழுவிற்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சஞ்சய் சிங், ”டெல்லியில் உள்ள கோவில்களை இடிக்க பாஜக எவ்வாறு திட்டமிடுகிறது என்பதை நான் இன்று வெளிப்படுத்துகிறேன். அவர்கள் நாடு முழுவதும் மதத்தின் பெயரால் நாடகம் நடத்துகிறார்கள், வெறுப்பை பரப்புகிறார்கள். ஆனால், இப்போது மோடி அரசு தலைநகர் டெல்லியில் உள்ள 53 கோவில்களை இடிக்க திட்டமிட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

அனுமதி கேட்டு டெல்லி அரசின் மதக் குழுவிற்கு ஒன்றிய அரசு எழுதியிருக்கும் கோவில்கள் பட்டியலில், “ஸ்ரீராமர் கோவில், கிருஷ்ணர் கோவில், துர்கை கோவில், மகாதேவ் கோவில், சாய் பாபா கோவில் மற்றும் குருத்வாரா அடங்கும்.

கஸ்தூரிபா நகர், ஸ்ரீனிவாஸ்புரி, முகமதுபூர், சரோஜினி நகர் ஆகிய இடங்களில் மொத்தம் 53 கோயில்கள் இடிக்கப்பட உள்ளன என்று சஞ்சய் சிங் கூறியுள்ளார்.

Source: India Today

 

 

டெல்லி: 53 கோவில்களை இடிக்க திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசு முடிவு – ஆம் ஆத்மி உறுப்பினர் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்