வாக்காளர் அடையாள அட்டையோடு ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான விதிகளை அரசு விரைவில் வெளியிடும் என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்
முன்பு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதியன்று 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே வாக்காளர்களாக பதிய முடியும். ஜனவரி 2 தேதி 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்ய ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். இந்தச் சீர்திருத்தம் மிகவும் அவசியமானது. 18 வயது முடிந்தவுடன் வாக்காளர்களாக் பதிவு செய்ய வேண்டும் என்று நாங்கள் அரசாங்கத்தைக் கோரினோம். இப்போது இந்த சீர்திருத்தத்தின் மூலம் நான்கு தேதிகள் உள்ளன. இதன் மூலம் 18 வயது நிரம்பியவர்கள் ஒருவருடம் வரைக் காத்திருக்காமல் உடனே வாக்காளர்களாக பதிவு செய்ய முடியும்.
`டான்’ – லும்பன் கலாசாரம், மாணவர் அரசியல், முதல் தலைமுறை பட்டதாரிகள் – ஒரு பார்வை
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க அனுமதிக்கும் வகையில் சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் ஒரு பகுதியே பெயர் சேர்க்கைக்கான நான்கு கட்-ஆஃப் தேதிகள் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.
“இரண்டாவது மிகப்பெரிய சீர்திருத்தம், போலியான வாக்காளர்களை சரிப்பார்க்க ஆதாரை இணைப்பது ஆகும். இது வாக்காளர் பட்டியலைத் தூய்மையாக்கும். இது வாக்காளர் பட்டியலை மேலும் வலுவாக மாற்றும்” என்று அவர் கூறியுள்ளார்.
விதிகள் எப்போது அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே வரைவு முன்மொழிவுகளை அனுப்பியிருப்பதால் விரைவில் முடிவுகள் வருமென்று நினைக்கிறேன். மாற்றப்பட வேண்டிய படிவங்களையும் நாங்கள் அனுப்பியுள்ளோம், அவை சட்டம் அமைச்சகத்திடம் உள்ளன. நமது தகவல் தொழில்நுட்ப அமைப்பை நாமும் மேம்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆதார் விவரங்களைப் பகிர்வது தன்னார்வமாக இருக்குமா என்கிற கேள்விக்கு “இது தன்னார்வமாக இருக்கும். ஆனால் வாக்காளர்கள் தங்களின் ஆதார் எண்களை வழங்காததற்கு போதுமான காரணத்தைக் கூற வேண்டும். ஆதார் இல்லாதது அல்லது அவர்கள் நினைக்கும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக விண்ணப்பிக்காதது குறித்து நிச்சயம் பதிவு செய்ய வேண்டும்” என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கூறியுள்ளார்.
Source: NDTV
சீமான் போல சிந்தித்த ராஜபக்சே திவாலான இலங்கை | Nathan Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.