ஆவின் முறைகேடு வழக்கில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடி முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டார். காவல்நிலையத்திற்கு உட்பட்ட இடத்திலேயே தங்கியிருக்க வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை பிணை விதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை: பொதுப்பாதையில் பிணத்தைத் தூக்கிச் செல்ல போராடிய தலித் மக்கள்
இந்த நிபந்தனையை தளர்த்த கோரி உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி முறையிட்டார். அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதாகவும், எனவே தனக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்றும் அவர் கோரினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு வழக்கறிஞர், வெளியிடங்களுக்கு செல்ல அனுமதித்தால் ராஜேந்திர பாலாஜி வழக்கின் சாட்சியங்களையும், ஆதாரங்களையும் கலைக்க நேரிடும் என்று வாதிட்டார்.
உ.பி: கியான்வாபி மசூதி வழக்கு – இந்துப் பெண்களின் மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம்
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சூரியகாந்த் மற்றும் ஜே.பி. பார்திபாலா விசாரணை அதிகாரியிடம் தெரிவித்த பிறகு தமிழ்நாட்டிற்கு உட்பட்ட இடங்களுக்கு ராஜேந்திரபாலாஜி செல்லலாம் என்று தகவல்கள் அளித்தனர். அதேநேரத்தில் தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். காலாவதி ஆகிவிட்ட ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட்டை புதுப்பித்தாலும் அட்டஹனை அவரிடம் வழங்கக்கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சாட்சியங்களை கலைக்க முயற்சிக்ககிக்கூடாது என்று ராஜேந்திர பாலாஜிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Queen Elizabeth | ஆண்ட பரம்பரை கதை: மக்களை ஏமாற்றும் மோசடி I Kamaraj Interview I England | Aransei
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.