Aran Sei

இரு வெவ்வேறு கொரோனா தடுப்புமருந்துகளின் 4 டோஸ்கள் போட்ட பெண்ணுக்கு கொரோனா: இந்தூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

த்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்படவிருந்த பெண் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டதால் அவரை விமானத்தில் ஏற விடாமல் அதிகாரிகள் தடுத்துள்ளனர். அந்த பெண் ஏற்கனவே 2 வெவ்வேறு கொரோனா தடுப்பூசியின் 4 டோஸ்களையும் செலுத்துக்கொண்டுள்ளார் என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்தூர்-துபாய் விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்குக் கொரோனா RT-PCR சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நேற்று(டிசம்பர் 29) 89 பயணிகளுக்குக் கொரோனா RT-PCR சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் தான் இந்த 44 வயதான பெண்ணுக்கும் கொரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை சுகாதாரத் துறை ஊழியர்கள் இந்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்று கண்டறியும்போது அந்த பெண்ணுக்கு எந்த அறிகுறியும் இல்லை.  ஆனால், 4 நாட்களுக்கு முன்பு அவருக்குச் சளி மற்றும் இருமல் இருந்ததாக அவர் விமான நிலைய சுகாதார ஊழியர்களிடம் கூறியதாக மருத்துவர் கவுரவ் கூறியுள்ளார்.
அந்த பெண் 12 நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் உள்ள தனது நெருங்கிய உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்ள இந்தூர் வந்ததாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் சினோபார்ம் மற்றும் ஃபைசரின் என்ற 2 கொரோனா தடுப்பூசிகளின் தலா 2 டோஸ் என 4 டோஸ்களை அவர் எடுத்துக் கொண்டுள்ளார் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
ஒவ்வொரு புதன்கிழமையும் புறப்படும் இந்தூர்-துபாய் விமானத்தில் பயணிக்க இருந்த 2 பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
Source : The Hindu
இரு வெவ்வேறு கொரோனா தடுப்புமருந்துகளின் 4 டோஸ்கள் போட்ட பெண்ணுக்கு கொரோனா: இந்தூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்