Aran Sei

சாதி மதத்திற்கு எதிராக ஒரு சமூகநீதி மாடல் உருவாகி வருகிறது: அதனை இளையராஜாவை வைத்து உடைக்க பாஜக முயற்சிக்கிறது என பா.ரஞ்சித் குற்றச்சாட்டு

சாதி, மதத்திற்கு எதிராக ஒரு சமூகநீதி மாடல் இங்கு உருவாகி வருகிறது. அத்தகைய மாடலை இளையராஜாவை வைத்து உடைக்க பாஜக முயற்சிக்கிறது என்று திரைப்பட இயக்குநரான பா. ரஞ்சித் குற்றம் சாட்டியுள்ளார்.

அம்பேத்கருக்கு நிகராக மோடியை புகழ்ந்துள்ள இசைஞானி இளையராஜா – மோடி, அம்பேத்கர் குறித்த புத்தகத்திற்கு முன்னுரை

“கலை என்பது யாரிடம் எல்லாம் சென்று சேருகிறது. கலை மற்றும் கலைஞர்களின் மதிப்பு என்ன? அவர்கள் பேசக்கூடிய கருத்துக்கள் சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கலைஞர்கள் உணர் வேண்டும். அந்த வகையில் கலைஞர்களுக்கு சமூக பொறுப்புணர்வு அவசியம் இருக்க வேண்டும்” என்று பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஒரு சாராரிடம் இருந்த இசையை ஜனநாயகத் தன்மையுடையதாக எல்லாருக்குமானதாக மாற்றியதில் இளையராஜாவின் பங்கு மிக அதிகம் என்று பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

மோடி – அம்பேத்கர் ஒப்பீடு பற்றிய கருத்தை இளையராஜா திரும்பப் பெறமாட்டார் – கங்கை அமரன் தகவல்

சமூகத்தில் பெரிதும் மதிக்கக்கூடிய ஒரு கலைஞரான இளையராஜா வழியாக சமூகத்திற்குச் சொல்லப்படும் கருத்தின் வழியாக ஒரு அரசியல் சூழ்ச்சி நடத்தப்படுகிறது. மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு எழுதிய புத்தகத்தின் முன்னுரையை இளையராஜாதான் எழுதினாரா என்பதே எனக்குச் சந்தேகமாகத்தான் உள்ளது என்று பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Ilayaraja விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் கிடையாது

சாதி மதத்திற்கு எதிராக ஒரு சமூகநீதி மாடல் உருவாகி வருகிறது: அதனை இளையராஜாவை வைத்து உடைக்க பாஜக முயற்சிக்கிறது என பா.ரஞ்சித் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்