Aran Sei

திட்டமிட்டு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் ஆளுநரை கண்டித்து வருகிற 13 ஆம் தேதி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – திருமாவளவன்

திட்டமிட்டு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் ஆளுநரை கண்டித்து வருகிற 13 ஆம் தேதி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான கருத்து முரண் அல்ல. அது இந்திய ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையிலான உறவு மற்றும் அதிகாரங்கள் தொடர்பான முரண்பாடு. ஆளுநர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இதைச் செய்யவில்லை. அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தவேண்டும் என்று திட்டமிட்டுதான் இதை செய்திருக்கிறார்.

சட்டப்பேரவையை விட்டுப் பாதியில் வெளியேறிய ஆளுநர்: ட்விட்டரில் டிரெண்டாகும் ‘#GetOutRavi’

ஏற்கெனவே அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட உரையை அவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவருடைய ஒப்புதலை பெற்ற பிறகு தான், சட்டப்பேரவையில் ஆளுநர் படிப்பதற்கு வைக்கப்படுகிறது. ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகுதான் அது அச்சுக்கே செல்கிறது. ஆக ஆளுநரின் ஒப்புதலோடு அச்சிடப்பட்ட உரையை அவர் அதில் உள்ளவாறு படிக்காமல் சில பகுதிகளையும், சில வார்த்தைகளையும் தவிர்த்திருக்கிறார். சிலவற்றை தன்னுடைய விருப்பம்போல் இணைத்து வாசித்திருக்கிறார்.

இது சங்பரிவாரர்களின் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட செயல் திட்டங்களில் ஒன்று என்றுதான் உணரமுடிகிறது. இதை மீறி படிக்கக்கூடாது, புதிதாக எதையும் நினைக்கக்கூடாது என்பது அவருக்கு தெரியாதது அல்ல. ஏற்கெனவே அவர் நாகாலாந்தில் ஆளுநராக இருந்தவர் தான். எனவே அவருக்கு விதிமுறைகள் என்னவென்று தெரியும். அவை மரபுகள் என்னவென்று தெரியும். அவர் இருக்கின்ற பொறுப்பு என்பது அரசமைப்புச் சட்ட பிரதிநிதி என்பதையும் அறிவார்” என்று கூறினார்.

Whatsapp rumour on Governor RN Ravi Stand on Tamilnadu Government I MK Stalin I Annamalai I BJP

திட்டமிட்டு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் ஆளுநரை கண்டித்து வருகிற 13 ஆம் தேதி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – திருமாவளவன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்