Aran Sei

தலித் சிறுமிகள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டிருந்தாலும் – சிறுமியின் குடும்பம் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை

த்திரபிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் சடலமாகவும், ஒரு சிறுமி ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட இருவரை கைது செய்தபிறகும், சிறுமிகளின் குடும்பத்தினர் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக புதன்கிழமை (பிப்ரவரி 17)  கான்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரது சகோதரர், “என் சகோதரி கண்விழுத்து என்ன நடந்தது என்று கூறினால் மட்டுமே நான் நம்புவேன். நாங்கள்  சிபிஐ விசாரணையை வேண்டுகிறோம்” எனக் கூறியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீருடை அணிந்த மற்றும் அணியாத காவல்துறையினர் அதிகமாக அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டிருப்பதை கண்டு அந்தக் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ள நிலையில் ”என்ன நடந்தது என்பது காவல்துறை அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும்” எனச் சிறுமிகளின் பாட்டி கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலித் சிறுமிகள் படுகொலை வழக்கு: சிறார் என்று அறியப்பட்ட குற்றவாளி – பெரியவர் என்பது ஆதார் அட்டை மூலம் கண்டுபிடிப்பு

சிறுமிகளைக் கொன்றதாக பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த வினய் குமார் மற்றும் அவருக்கு உதவியாக அவரது நண்பரைக் கைது செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யபட்டிருக்கும் வினய் குமாரின் சகோதரி சீமா, வினய் குமார் சிறுமிகளைப் பற்றிப் பேசுவதை நான் கேள்விப்பட்டதில்லை என கூறியதாக, தி இந்து தெரிவித்துள்ளது.

கார்பரேட்களுக்கான சமூக பொறுப்பை கட்டாயமாக்க கூடாது – விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி கருத்து

”அவர் இதைச் செய்திருந்தால், அன்று மாலை  அவர் அமைதியாக வீட்டில் அமர்ந்திருக்க மாட்டார்; அவர் ஓடிப்போயிருப்பார். அவர் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார்” எனச் சீமா தெரிவித்ததாக, அச்செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆறு குழந்தைகள் கொண்ட தலித் குடும்பத்தின் மூத்த பிள்ளையான வினய் குமார், பறவைகளுக்குத் தீவனம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாகவும், ஊரடங்கினால் வேலையிழந்த அவர்,  குடும்பத்தின் வயல்களைக் கவனித்து வந்ததாகவும், சீமா கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் குற்றம்சாட்டப்பட்ட இரண்டாவது ஆளான 13 வயது சிறுவனின் தந்தை, ”புதன்கிழமை (பிப்ரவரி 17) காவல்துறை என் மகனையும், வினய் குமாரையும் அழைத்துச் சென்றனர். எங்களுக்கு சிபிஐ விசாரணை வேண்டும். எங்கள் பிள்ளைகளை யார் சிக்க வைத்தார்கள் எனத் தெரியாது. ஆனால் அவர்கள் கடவுளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” எனத் தெரிவித்ததாக, தி இந்து கூறியுள்ளது.

தலித் சிறுமிகள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டிருந்தாலும் – சிறுமியின் குடும்பம் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்