Aran Sei

பொது அமைதியைக் கெடுத்ததாக நுபுர் சர்மா, நவீன் குமார், யதி நரசிங்கானந்த் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு – டெல்லி காவல்துறை தகவல்

பொது அமைதியை கெடுக்கும் வகையில் மக்களை பிளவுபடுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டதாகவும், பகிர்ந்ததாகவும் கூறி, முன்னாள் பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால், ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, சர்ச்சைக்குரிய இந்து சாமியார் யதி நரசிங்கானந்த் மற்றும் பலர் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களின் பகுப்பாய்வுக்குப் பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். “பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் செய்திகளை பதிவிட்டவர்கள், பகிர்ந்தவர்கள் மற்றும் பிரிவினைக் ஏற்படுத்துவதற்கு மக்களைத் தூண்டுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கர்நாடகா: காவிமயமாகும் பாடப்புத்தகங்களை திரும்பப் பெறும்வரை எங்கள் போராட்டம் தொடரும் – மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் உறுதி

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் தூண்டுதல்களைத் தூண்டுதல்), 295 (எந்த வகுப்பினரின் மதத்தையும் அவமதிக்கும் நோக்கில் வழிபாட்டுத் தலங்களை அசுத்தம் செய்தல்), 505 (பொதுக் கொடுமைக்கு வழிவகுக்கும் அறிக்கைகள்) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜஹாங்கீர்புரி: காவல் துறைக்கு பயந்து ஊரிலிருந்து வெளியேறும் இஸ்லாமிய இளைஞர்கள்

நுபுர் சர்மாவுக்கு எதிராக ஒரு வழக்கும், ஒவைசி, ஜிண்டால், நரசிங்கானந்த், ஷதாப் சவுகான், சபா நக்வி, மௌலானா முஃப்தி நதீம், அப்துர் ரஹ்மான் மற்றும் குல்சார் அன்சாரி உள்ளிட்டோர் சமூக ஊடகத்தில் மோசமான முறையில் பதிவிட்டது குறித்து வழக்கும் பதியப்பட்டுள்ளது.

source: newindianexpress

Nupur Sharma வின் பகீர் பின்னணி Nupur Sharma Comment on Prophet Muhammad

பொது அமைதியைக் கெடுத்ததாக நுபுர் சர்மா, நவீன் குமார், யதி நரசிங்கானந்த் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு – டெல்லி காவல்துறை தகவல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்