Aran Sei

விவசாயிகளிடம் ’தனி நபர் பத்திரம்’ தாக்கல் செய்ய சொன்ன விவகாரம் – உத்திர பிரதேச அரசிடம் விளக்கம் கேட்ட அலகாபாத் உயர்நீதிமன்றம்.

டிராக்டர் வைத்திருக்கும் விவசாயிகள் ரூபாய் 50 ஆயிரம் முதல் 10 லட்சம்வரை தனிநபர் பத்திரங்கல் சமர்பிக்க,  எந்த அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது என,  உத்திரபிரதேச அரசு விளக்கம் அளிக்க, அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

ஏழை விவசாயிகளுக்கு எவ்வாறு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது என, பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘வன்முறையைத் தூண்டிய பாஜக; டெல்லியில் ரத்தம் சிந்திய விவசாயிகள், காவலர்கள்’ – சிவசேனா குற்றச்சாட்டு

உத்திரபிரதேசம் மாநிலம்,  சிதாப்பூர் மாவட்டத்தில் உள்ள டிராக்டர் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, மாநில அரசு  சார்பில் ஜனவரி 19 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பட்டிருந்ததாகவும், அதில் டிராக்டர் பேரணியில் ஏற்படவிருக்கும், அசம்பாவிம் ஏற்பட்டால், அதற்கு உத்திரவாதமாக, ரூபாய் 50 ஆயிரம் முதல் 10 லட்சம்வரை தனிநபர் பத்திரங்கள் சமர்பிக்க வேண்டும் எனக் கூறியிருந்ததாகவும் என்டிடிவி தெரிவித்துள்ளது.

இதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில், சமூக செயல்பாட்டாளர் அருந்ததி துரு, தொடர்ந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, “விவசாயிகளுக்கு மாநில அரசு அதிகாரிகள் வழங்கியிருக்கும் நோட்டீஸ் அடிப்படையற்றது என்றும், அவர்கள் வீடுகளைச் சுற்றி வளைத்து, வெளியே வராமல் செய்திருப்பது, தனிநபர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாக உள்ளது” எனத் தெரிவித்ததாக, அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் – ஐ.நா மனித உரிமை ஆணையம் அதிரடி

அருந்ததி துரு தாக்கல் செய்த மனுவில், விவசாயிகளிடம் கோரபட்டுள்ள தனிநபர் பத்திரங்களின் தொகை மிகையானது, அதை ஏழை விவசாயிகளிடம் கோர முடியாது என்றும், விவசாயிகள் பதிலளிக்க எந்த அவகாசமும் வழங்காமல், உள்ளுர் அதிகாரிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வழங்கப்பட்டு இருக்கிறது எனக் குறிப்பட்டுள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

பிரதேச துணை மாஜிஸ்ரேட்டால், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ் ஒன்றை என்டிடிவி ஆய்வு செய்ததாகவும், அதில் “விவசாய சட்டங்கள் சார்பாகப் பின்வரும் நபர்களுக்குள் முரண்பாடு இருக்கிறது. இதனால் பதற்றம் நிலவுகிறது. எனவே அமைதி மீறல் ஏற்படலாம். அதனால் இரு தரப்புகளை, இது போன்ற நோட்டீஸ்கள் மூலம் பிணைத்து வைக்க வேண்டியது அவசியம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Photo Credit : NDTV.com

இந்த நோட்டீஸ் 10 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஏன் கையெழுத்திட கூடாது என, விவசாயிகள் உள்ளூர் நீதிபதி முன்பு 2 தினங்களுக்குள் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக, என்டிடிவி  செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளிடம் ’தனி நபர் பத்திரம்’ தாக்கல் செய்ய சொன்ன விவகாரம் – உத்திர பிரதேச அரசிடம் விளக்கம் கேட்ட அலகாபாத் உயர்நீதிமன்றம்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்