Aran Sei

ஓட்டுநர் உரிமத்தில் இருக்கும் புகைப்படத்தின் அடிப்படையில் டெல்லி கலவரத்தில் ஈடுபட்டதாக 94 நபர்கள் கைது – டெல்லி காவல்துறை

credits : dna

ஓட்டுநர் உரிமத்தில் இருக்கும் புகைப்படத்தின் அடிப்படையில் டெல்லி கலவரம் தொடர்பாக, 94 நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என டெல்லி காவல்துறை ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா கூறியிருப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லி காவல்துறையின் வருடாந்திர பத்திரிக்கையாளர் சந்திப்பில், 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற  கலவரத்தின் தொடர்பாக பேசிய ஸ்ரீவஸ்தவா, “நியாயமான மற்றும் சுதந்திரமான விசாரணை” மேற்கொள்ளத் தொழிற்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது எனக் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கலவரம் தொடர்பாக பேசிய ஸ்ரீவஸ்தவா, அனைத்து தரப்பினர்களின் புகார்களையும் ஏற்று பல்வேறு வழக்குகளைக் காவல்துறை பதிவு செய்திருப்பதாகவும், ”எங்களின் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என எந்தத் தரப்பு மக்களுக்கும் குறை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். அடுத்து நியாயமான மற்றும் சுதந்திர விசாரணையை உறுதிபடுத்தினோம். விசாரணை மேற்கொள்ள மூன்று தனிப்படைகளை அமைத்தோம்” எனப் பேசியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

ராமர் கோயில் கட்டுமானம் – போலியாக நன்கொடை பெற்றதாக ஐந்து பேர் மீது வழக்கு

சிசிடிவி காட்சிகளை பகுப்பாய்வு  செய்வதற்கும், குற்றத்தில் ஈடுபட்ட  நபர்களை அடையாளம் காண்பதற்கும் தொழிற்நுட்பம் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது என்று கூறியுள்ள ஸ்ரீவத்சவா,  போக்குவரத்து அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட தரவுகள், குற்றவாளிகள் தரவுபட்டியலுடன் ஒப்பிடப்பட்டது எனவும் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சிகள் மற்றும் காணொளிகள் மூலம் 231 நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அதில்  94 நபர்களின் அடையாளங்கள் ஓட்டுநர் உரிமைத்தில் இருக்கும் புகைப்படத்தை வைத்து உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார் என இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

ஓட்டுநர் உரிமத்தில் இருக்கும் புகைப்படத்தின் அடிப்படையில் டெல்லி கலவரத்தில் ஈடுபட்டதாக 94 நபர்கள் கைது – டெல்லி காவல்துறை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்