ஹரியானா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு 75 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் அம்மாநில அரசின் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் இச்சட்டத்தை நிறுத்தி வைப்பதற்குத் தேவையான காரணங்களைத் தெரிவிக்காததால் அந்த இடைக்காலத் தடை உத்தரவை ரத்து செய்வதாகக் கூறியுள்ள உச்சநீதிமன்றம், கூடுதலாக முதலாளிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று ஹரியானாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹிஜாப் விவகாரம்: முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் ஹிஜாபுக்கு ஆதரவாக கடிதம்
ஹரியானா மாநில உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பு சட்டம், 2020-ஆனது, இந்த ஆண்டு ஜனவரியில் அமலுக்கு வந்தது. அதிகபட்ச மாதச் சம்பளமாக ரூ.30,000 வழங்கப்படும் வேலைகளுக்கு இந்தச் சட்டம் பொருந்தும்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள தனியார்த் துறை நிறுவனங்கள், சங்கங்கள், அறக்கட்டளைகள், கூட்டு நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனம், வியாபாரம் நிறுவனம் அல்லது ஏதேனும் சேவையை வழங்கும் நிறுவனங்களில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை சம்பளம் அல்லது ஊதியத்தில் அடிப்படையில் பணியமர்த்தப்படுபவர்களுக்கு இச்சட்டம் பொருந்தும் என்று மாநில அரசு கடந்த ஆண்டு கூறியிருந்தது.
Source : newindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.