தொலைத்தொடர்புக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெற்று வந்தது. இந்தியாவின் மாபெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ₹ 88,078 கோடிக்கு அலைக்கற்றையை வாங்கியுள்ளது.
மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடிக்கு விற்பனையானது. இதில் ரூ.88 ஆயிரம் கோடியுடன் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது.
தொலைத் தொடர்பு துறையில் இப்போது 4ஜி அலைக்கற்றை சேவை பயன்பாட்டில் உள்ளது. இதன் அடுத்தகட்டமாக 5ஜி அலைக்கற்றை சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது பயன்பாட்டுக்கு வந்தால் செல்போன்களின் இணையதள வேகம் 10 மடங்கு அதிகமாக இருக்கும். இந்த சேவை முக்கிய நகரங்களில் வரும் அக்டோபரில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
இதற்காக 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. இதில் 20 ஆண்டுகளுக்கு10 பேண்ட்களில் 72,098 மெகாஹெர்ட்ஸ் (72 ஜிகாஹெர்ட்ஸ்) அலைக்கற்றையை ஏலம் விட தொலைத் தொடர்பு துறை முடிவு செய்தது. இதன் அடிப்படை மதிப்பு ரூ.4.3 லட்சம் கோடி ஆகும். 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட் வொர்க்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன.
இந்நிலையில், 7-வது நாளான நேற்று ஏலம் முடிந்தது. இதில், 72,098 மெகாஹெர்ட்ஸில் 51,236 மெகாஹெர்ட்ஸ் (71%) மட்டுமே ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடிக்கு விற்பனையானதாக ஒன்றிய அரசின் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
கச்சநத்தம் படுகொலை வழக்கு – 27 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
இதில் அதிக அளவாக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ, 24,740 மெகாஹெர்ட்ஸை ரூ.88,078 கோடிக்கும், சுனில் பார்தி மிட்டல் தலைமையிலான ஏர்டெல் 19,867 மெகாஹெர்ட்ஸை ரூ.43,084 கோடிக்கும் வோடஃபோன் ஐடியா ரூ.18,784 கோடிக்கும், அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் 400 மெகாஹெர்ட்ஸை ரூ.212 கோடிக்கும் ஏலம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Source: ndtv
நீதி கிடைக்கும் வரை போராட்டம் | Kallakurichi international School | Chat with Haseef | sakthi school
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.