Aran Sei

2021-22-ல் நடந்த 511 குழந்தை திருமணங்கள்: மாணவிகளை மீட்டு மீண்டும் பள்ளியில் சேர்த்த தமிழ்நாடு அரசு

கொரோனா முதல் அலையின்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில், 511 பள்ளி மாணவிகளுக்குக் குழந்தைத் திருமணம் நடத்தப்பட்டுள்ளது என்று தற்போது தமிழ்நாடு அரசுக்கு தெரிய வந்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று தமிழ்நாட்டில் 2020 மார்ச் மாதம் தனது பாதிப்புகளை காட்டத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் அரசால் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டு நோய்த்தொற்று தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.

இஸ்லாமியர்களின் கருவுறுதல் விகிதம் கடும் சரிவு: தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தகவல்

இதனால் பலருக்கு சொந்த ஊரிலேயே சென்று தங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதில் பல குடும்பத்தினர் அவர்களின் வீடுகளுக்குள் அடைந்து கிடந்த நிலையும் இருந்தது. இது போன்ற சூழ்நிலைகள் வீட்டிலிருந்த பெண் குழந்தைகளுக்குப் பெற்றோர் தங்களின் உறவினர்களைக் கண்டறிந்து திருமணம் செய்து வைக்கும் அவலநிலையும் அரங்கேறியது. அப்படி கொரோனா காலத்தில் வந்த முதல் அலையின்போது மட்டும், பள்ளி மாணவிகளுக்கு நடைபெற்ற 511 குழந்தை திருமணம் தற்போது தெரியவந்துள்ளது. அவற்றிலிருந்து மாணவிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த கல்வியாண்டில் (2021-22) இடைநிற்றலில் ஈடுபட்ட 18 வயதிற்கு உள்பட்ட மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் 18 வயதிற்கு உள்பட்ட மாணவர்களைப் பள்ளியில் சேர்ப்பதற்கு வீடு வாரியாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்தான் இந்த விவரங்கள் யாவும் தெரியவந்துள்ளது.

பட்டியல் சமூகப் பெண்ணை திருமணம் செய்ததால் வேலை பறிப்பு – வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு

குழந்தைத் திருமணம் செய்து கொண்டு இடையில் நின்ற 511 மாணவிகளை, அவர்களின் ஆசிரியர்களே கண்டறிந்துள்ளனர். அவர்களை மீண்டும் அழைத்துச் சென்று பள்ளியில் சேர்த்து உள்ளனர். இவர்களைப் போலவே கொரோனா தாக்கத்தினால் மாணவர்கள் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமையின் காரணமாகப் படிப்பை நிறுத்தி விட்டு விலகிச் சென்றுள்ளனர் அவர்களையும் கண்டறிந்து பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொரோனா காலத்தில் பள்ளி மாணவிகளுக்கு நடைபெற்ற 511 குழந்தை திருமணம் மாணவிகள் திருமணத்தைப் பொருத்தவரை எட்டாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை படித்த மாணவிகளுக்கு அவர்களின் பெற்றோர் திருமணம் நடத்திவைத்துள்ளனர். அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் காரணமாக அதிக அளவில் நடைபெற்று வந்த குழந்தைத் திருமணங்கள் குறைந்திருந்தன. ஆனால் தற்போது பள்ளிக்கல்வித் துறை நடத்திய ஆய்வில் குழந்தை திருமணங்கள் நடைபெற்று உள்ளது தெரிந்துள்ளது.

குழந்தை திருமணத்தைப் பதிவு செய்ய அனுமதிக்கும் ராஜஸ்தான் அரசின் சட்டத்திருத்தம் – பள்ளி படிப்பைப் பாதிக்கும் என என்சிபிசிஆர் குற்றச்சாட்டு

11-ம் வகுப்பில் 417 மாணவிகளும், 12-ம் வகுப்பில் 2 மாணவிகளும், 10-ம் வகுப்பில் 45 மாணவிகளும்; 9-ம் வகுப்பில் 37 மாணவிகளும் குழந்தை திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும் பதிமூன்று வயதை கடந்த 8-ம் வகுப்பு மாணவிகள் 10 பேருக்கும் குழந்தை திருமணங்கள் நடத்தப்பட்டிருந்தது பள்ளிக்கல்வித்துறையின் ஆய்வில் கண்டறியப்பட்டது.

Source : Puthiyathalaimurai 

படுக்கையறையை எட்டிப்பார்க்கும் ஆபாச அண்டா Bayilvan Ranganathan

2021-22-ல் நடந்த 511 குழந்தை திருமணங்கள்: மாணவிகளை மீட்டு மீண்டும் பள்ளியில் சேர்த்த தமிழ்நாடு அரசு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்