Aran Sei

திருடப்பட்ட ஃபேஸ்புக் பயனாளர்களின் செல்ஃபோன் எண்கள் – ஒரு எண் சுமார் 1500 ரூபாய்க்கு விற்பனை

500 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் செல்போன் எண்கள், டெலிகிராம் செயலியின் ‘பாட்’ (BOT) மூலம் விற்பனைக்கு வந்துள்ளது என மதர்போர்ட் இணையதளத்தை சுட்டிக்காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தப் பிரச்னையை முதலில் கண்டுபிடித்துக் கூறிய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் அலான் கால், இந்த 600 மில்லியன் செல்போன் எண்களில், 6 லட்சம் செல்போன் எண்கள் இந்தியர்களின் கணக்குகளுக்குத் (ஃபேஸ்புக்) தொடர்புடையது எனத் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை மூலம்  ‘பாட்’ பயன்படுத்தும் பயனாளர், உலக முழுவதும் உள்ள பல்வேறு ஃபேஸ்புக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்களையும் பிற விபரங்களையும் சேகரித்து, அதை டெலிகிராமில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, அலான் கால் மதர்போர்ட் இணையதளத்திற்கு  தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்புவுக்கு பத்மஸ்ரீ விருது – சர்ச்சையும் பின்னணியும்

ஃபேஸ்புக் தளத்தில், இது போன்ற தகவல் திருட்டு பிரச்னை வருவது இது முதல்முறையல்ல. இதே போன்று 2019 ஆம் ஆண்டும், பாதுகாப்பற்ற சர்வர்களில் ஃபேஸ்புக்கை பயன்படுத்தியவர்களில், 419 மில்லியன் கணக்குகளின் செல்போன் எண்கள் வெளியானது. இந்தத் தவறை ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக் நிறுவனம், பின்னர் அந்தப் தொழில்நுட்ப பிரச்சனையை சரி செய்தது குறிப்பிடத்தக்கது.

டெலிகிராமில், ‘பாட்’ மூலம் வெளியான விவரங்கள்அனைத்தும், 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்றாலும், ஒவ்வொரு ஆண்டும்  ஃபேஸ்புக் பயனாளர்கள் தங்கள் செல்போன் எண்களை புதுப்பிப்பதில்லை என்பதால், அந்தத் தகவல், பெரும்பாலும் சரியாக இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.5 லட்சம் டிராக்டர்களுடன் விவசாயிகளின் படை தயார் – அணிவகுப்பால் அதிரப்போகும் டெல்லி

மதர்போர்ட் இணையதளத்தின் அறிக்கையில் “டெலிகிராமில், ‘பாட்’ மூலம் ஒருவருடைய செல்போன் எண்ணை வைத்து. அவரது ஃபேஸ்புக் கணக்கைப் பார்க்க முடியும்.  அதில் இருக்கும்  தகவல்களை பயன்படுத்த பணம் செலுத்த வேண்டி இருக்கும். இப்படியாக கணக்குகளை பயன்படுத்த, பாட் -ஐ உருவாக்கியவர், ஒரு ஃபேஸ்புக் கணக்கிற்கு 20 அமெரிக்க டாலருக்கு  (சுமார் ரூ 1,460) விற்பனை செய்கிறார். அதே போல, கணக்குகளின் விவரங்களுக்கு, மொத்தமாக 10,000 கணக்குகளுக்கு, 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ 3,65,160) வசூலிக்கிறார்” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்னையின் தன்மை, அது  கண்டறியப்பட்ட பொழுதே கடுமையாக இருந்ததாகவும், இன்று கவலைக்குரியதாக மாறியிருக்கிறது என அலான் கால் தெரிவித்திருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

மதர்போர்ட் இணையதளத்திற்கு அலான் கால் தெரிவித்தாக, இந்தத் தகவல்கள் அனைத்தும், “தவறான நபர்கள் கைகளில் கிடைத்தால், மோசமான செயல்களுக்குப் பயன்படுத்தப்படும்” எனவே, ஃபேஸ்புக் நிறுவனம், தங்கள் பயன்பாட்டாளர்களுக்கு, இது தொடர்பாகத் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருப்பதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.பே

திருடப்பட்ட ஃபேஸ்புக் பயனாளர்களின் செல்ஃபோன் எண்கள் – ஒரு எண் சுமார் 1500 ரூபாய்க்கு விற்பனை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்