பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் ’பசு மாடு அறிவியல்’ ஆன்லைன் தேர்வில் 5 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிடுள்ளது.
மத்திய கால்நடை அமைச்சகத்தால், 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ராஷ்டிரிய காமதேனு ஆயோக் அமைப்பு, இந்தத் தேர்விக்கான பாடத்திட்டத்தை, தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், ராஷ்ட்ரிய காமதேனு அயோக் அமைப்பு நடத்தும், ’சுயாதீன மாடு அறிவியல்’ தேர்வை ஊக்குவிக்குமாறு, 900 பல்கலைகழகத்தின் துணை வேந்தர்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு கடிதம் எழுதியது.
‘புதுச்சேரியில் பின்வாசல் வழியாக காலூன்ற முயலும் பாஜக, இது தமிழ்நாட்டுக்கான ஒத்திகையே’ – திருமாவளவன்
ஒரு மணிநேரம் நடைபெற இருக்கும், இந்தத் தேர்விற்கு, வெளியிடப்பட்டிருக்கும் பாடத்திட்டத்தில், “கதிர்வீச்சை கட்டுப்படுத்துவதற்காக மாட்டு சாணத்தை இந்தியா மற்றும் ரஷ்யா, அணுசக்தி மையங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதேபோல், போபால் விஷ வாயு கசிவின்போது, போபால் குடியிருப்புவாசிகளை (சாணம்) பாதுகாத்தது. சூரிய சக்தியை உறிஞ்சும் விசேஷ சக்தி இந்திய மாடுகளிடம் இருக்கிறது” போன்ற தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
”இதில் அறிவியலற்றது என்று எதுவுமில்லை. இந்திய மாட்டினத்தின் முக்கியத்துவத்தை நாங்கள் முன்வைக்க விரும்புகிறோம். அதனால், இந்தத் தேர்வை நடத்துகிறோம்” என ஜனவரி 5 ஆம் தேதி நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் தலைவர் வல்லபாய் கத்திரியா தெரிவித்தார்.
மோடி தலைமை வகிக்கும் அறக்கட்டளைகள் பற்றிய தகவல் தன்னிடம் இல்லை – பிரதமர் அலுவலகத்தின் ஆர்டிஐ பதில்
”13 மொழிகளில் நடத்தப்பட இருக்கும் இந்தத் தேர்வுக்கு ஜனவரி 5 ஆம் தேதி விண்ணப்பங்கள் தொடங்கின. இதுவரை 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 5 லட்சத்திற்கு அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பாக்கப்படுகிறது. இந்தத் தேர்வு முதல் முறையாக நடத்தப்படுகிறது. வரும் ஆண்டுகளில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்புகிறோம். இந்தத் தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்” என ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்கின் செய்தி தொடர்பாளர் புரேஷ் குமார் தெரிவித்ததாக என்டிடிவி கூறியுள்ளது.
இதற்கு முன்னர், மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ், ”சூரிய ஒளியை தங்கமாக்கும் ஒரு விசேஷ சக்தி, இந்திய மாடுகளிடம் இருக்கிறது. அதனால் தான் அதன் பால் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.