ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் நடத்திய ஆய்வில் பள்ளிகளுக்கு 48% மாணவர்கள் நடந்தே செல்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் நடத்திய ஆய்வில் பள்ளிகளுக்கு 48% மாணவர்கள் நடந்தே செல்வதாகவும், கற்றலில் பெற்றோரின் ஆதரவு இல்லாமல் மாணவர்கள் இருப்பதாக 25 சதவீதம் பள்ளிகள் தெரிவித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
ஒன்றிய கல்வி அமைச்சகம் சார்பில் 2021ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் என்ஏஎஸ் எனப்படும் National Achievement Survey ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 3, 5, 8 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொண்டனர். 720 மாவட்டங்களில் இருந்து கிராமம் மற்றும் நகர்ப்புற மாணவர்கள் 34 லட்சம் பேர் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.
ஆய்வுக்காக மாணவர் கேள்வித்தாள், ஆசிரியர் கேள்வித்தாள் மற்றும் பள்ளி கேள்வித்தாள் ஆகியவை உருவாக்கப்பட்டு, 22 பிராந்திய மொழிகளில் என்சிஇஆர்டியால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. இந்த ஆய்வு சிபிஎஸ்இயால் மேற்பார்வை செய்யப்பட்டது.
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த ஆய்வு நடைபெற்றது. 3 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம், கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பாடங்களில் ஆய்வுகள் நடைபெற்றன.
நாடு முழுவதும் ஏறத்தாழ 48 சதவீத மாணவர்கள் நடந்துதான் பள்ளிக்குச் செல்கின்றனர். 18 சதவீதம் பேர் மிதிவண்டி மூலம் பள்ளிக்குச் செல்கின்றனர். 9 சதவீத மாணவர்கள் பள்ளி போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர். 3 சதவீத மாணவர்களுக்கு 4 சக்கர வாகனங்கள். 8 சதவீத மாணவர்கள் சொந்த இரு சக்கர வாகனங்கள் மூலம் பள்ளிக்குச் செல்கின்றனர்.
அஜ்மீர்: கியான்வாபி மசூதியைத் தொடர்ந்து தர்காவை குறிவைத்துள்ள இந்துத்துவாவினர்
கற்றலில் பெற்றோரின் ஆதரவு இல்லாமல் மாணவர்கள் இருப்பதாக 25 சதவீதம் பள்ளிகள் தெரிவித்துள்ளன. 51 சதவீத மாணவர்களின் வீட்டில் மட்டுமே பெற்றோருக்கான புத்தகங்கள் அல்லது இதழ்கள் இருக்கின்றன என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
Source: TimesOfIndia
MK Stalin பெயரை கேட்டு திக்கி திணறிய L Murugan
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.