Aran Sei

42% இளைஞர்களுக்கு வேலை இல்லை; நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறதா? – ராகுல்காந்தி கேள்வி

ந்தியாவில் 42% இளைஞர்களுக்கு வேலை இல்லை; நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறதா என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவிடமிருந்து நாட்டைக்காக்கப்போவதாகக் கூறி பாரத் ஜூடோ யாத்ராவை (இந்திய ஒற்றுமைக்கான நடைபயணம்) கன்னியாகுமரி மாவட்டம், முழகுமூடு பகுதியில் இருந்து தொடங்கியுள்ளார். கடந்த 7ம் தேதி இந்த நடைபயணம் தொடங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர்  இந்நடை பயணத்தில் கலந்து கொண்டனர்.

நீதிக்காக குரல் எழுப்புவது கிரிமினல் குற்றமா? – சித்திக கப்பன் வழக்கில் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்

இந்நடைபயணம் 150 நாட்கள் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆடையை குறித்து பேச வேண்டுமானால் மோடியின் 10 லட்ச ரூபாய் சூட் குறித்து பேச வேண்டி இருக்கும் – பாஜகவின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் பதிலடி

இந்நிலையில், நாட்டில் உள்ள இளைஞர்களில் 42% பேர் வேலையில்லாமல் உள்ளனர். இந்தியாவின்  எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறதா; நாம் அதற்காக நடைபயணம் மேற்கொள்வோம். நாம் வேலைவாய்ப்பு கிடைக்க நடை பயணம் செய்வோம் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

என்னை‌ உருவாக்கிய ஆசிரியர்கள் I Journalist Jenraam I I Jenraam media I Aransei | Governmentschools

42% இளைஞர்களுக்கு வேலை இல்லை; நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறதா? – ராகுல்காந்தி கேள்வி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்